பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஜேம்ஸ் ஆலன்


வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கின்றது. உழைப்பாற்றலை உருமாற்றும் செயற்பாடு அதனுடைய நன்மையானதும், தீமையானதுமான கூறுகளில் இருப்பதையே வெப்பத்தினுடையவும், குளிர்ச்சியினுடையவும் உச்ச நிலைகள் இங்குக் குறிப்பிடுகின்றன.

“பெருமளவில் பாவியாக இருப்பவனே பெருமளவில் ஒழுக்கவாணராகிவிடுகின்றான்” என்ற முதுமொழியில் இந்த உண்மை மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆற்றலே உயிர்ப்புடையது. அதின்றி எதையும் செய்து முடிக்கவியலாது; அறமேனும் அங்கிருப்பதில்லை; ஏனெனின், அறமென்பது தீமையைச் செய்யாமலிருப்பதில் மட்டும் அடங்கியிருப்பதன்று. ஆனால், முதன்மையாக நன்மை செய்வதிலேயும் அடங்கியிருக்கின்றது. இதை முயற்சி செய்பவர்கள் இருப்பினும் கூட, ஆற்றல் போதாமையால் தோல்வியடைந்து விடுகின்றனர். அவர்களுடைய முயற்சிகள் ஆக்கமான பயன்களை உண்டுபண்ணப் போதிய வலுவற்றனவாயிருக்கின்றன. அத்தகையோர் தீயநெறி கொண்டவர்களல்லர்; அவர்கள் எப்போதுமே மன மறிந்து கேடு செய்வதில்லை என்பதற்காக நன்மக்கள் தோல்வியுற்றுவிடுவதாக வழக்கமாக அவர்களைக் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால், கேடு செய்வதற்கான முன்டு இல்லாமை நன்மை வழி நடப்பதாகாது; அந்நிலை வலுவும் ஆற்றலுமின்றி இருப்பதேயாகும். கேடு விளைத்தற்கான ஆற்றலிருந்தும் நன்மையான வழிகளில் தம் ஆற்றல்களை நெறிப்படுத்த வேண்டுமெனத் தேர்ந்து தெளிபவனே உண்மையில் நல்ல