பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

ஜேம்ஸ் ஆலன்


காட்டுவதாயிருக்கின்றது; “ஓயாத விழிப்புணர்ச்சியே விடுதலையின் விலையாகும். ஏதேனும் செய்து முடிக்க வேண்டுமெனின், மனிதன் தானே அதைச் செய்வானாக; அதை ஊக்கத்துடன் பொருதுவானாக” என்று கூறியிருப்பதுவும் அதே ஆசிரியரேயாகும். செயற்பாடு படைப்புத் திறனுடையது, அதை முறைப்படி பயன்படுத்துங்கால் பெருக்கமும், வளர்ச்சியும் தொடர்ந்து வந்துச் சேரும். மேலும் அதிகமான ஆற்றலைப் பெற வேண்டுமெனின், நம்பால் ஏற்கனவே அமைந்துள்ள ஆற்றலை அதன் முழு அளவிற்கு நாம் பயன்படுத்தியாக வேண்டும். இருப்பவனுக்கே மேலும் தரப்படுகின்றது, ஏதேனும் ஒரு கடமையில் ஊக்கமுடன் தனது கையை வைப்பவனுக்கே ஆற்றலும் விடுதலையும் வந்து சேர்கின்றன.

ஆற்றல் படைப்புச் சத்தியுடையதாயிருக்க நன்னோக்குகளை நோக்கி அது திருப்பப்படுதல் மட்டும் போதுமானதாகாது அதனை அக்கறையுடன் கட்டுப்படுத்திப் பேணிக் காக்கவும் வேண்டும். 'ஆற்றலைப் பேணிக் காத்தல்' என்பது எந்த ஆற்றலும் வீணாக்கப்படுவதோ அழிந்துபடுவதோ இல்லை என்ற இயற்கையின் விதியை எடுத்துரைக்கும் தற்காலச் சொல்லாகும்; தன் ஆற்றல்களின் விளைவுகள் பயனுடையதாய் இருக்கவேண்டுமெனின், மனிதன் இந்த அடிப்படையில் அறிவுத் திட்பமுடன் பணியாற்ற வேண்டும். கூச்சலும், பரப்பரப்பும் மிகுதியான அளவு ஆற்றல் வீணாவதேயாகும். இயங்கிக் கொண்டு இருக்கின்ற ஆவியில் இரைச்சல் கேட்பதே இல்லை. தப்பி வெளியேறும் ஆவியே