பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 42


வளர்ந்து வரும் தங்களுடைய தகுதிக்கேற்பத் தங்களது செல்வச் செழிப்பையும் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்கின்றனர்.

செல்வனாக வேண்டிய வறிய மனிதன் கீழ்ப்படியிலிருந்து தொடங்க வேண்டுமேயன்றித் தனது தகுதியை மிகவும் மிஞ்சிய ஏதோவொன்றைப் பெற முயற்சி செய்வதன் மூலம் செல்வச் செழிப்புள்ள தோற்றம் கொள்ள வேண்டுமென்று விரும்பவோ, முயலவோ கூடாது. கீழ்ப்படியில் எப்போதும் மிகுதியான வாய்ப்பு இருப்பதுடன் அது தொடங்குவதற்கு மிகவும் பாதுகாப்பான இடமுமாகும். ஏனெனின், அதைவிடக் கீழ்ப்பட்டது அங்கு எதுவுமில்லை. ஒவ்வொன்றும் மேற்பட்டதுவே. வாணிபத்துறையில் ஈடுபடும் பல வாலிபர்கள் வெற்றிக்கு இன்றியமையாதது எனத் தாம் மடமையாகக் கருதுகின்ற வீறாப்புப் பேச்சாலும், பகட்டாலும் விரைவில் கவலையடைகின்றனர். ஆனால், அது பிறரை அன்றி அவனையே ஏமாற்றி விரைவில் அழிவுக்கு வழிகாட்டுகின்றது. எத்துறையாயினும் சரியே ஒருவனுடைய தகுதியையும், குறித்து மிகைப் படுத்துப்பட்ட விளம்பரத்தைக் காட்டிலும் அடக்கமானதும், உண்மையானதுமான தொடக்கமே வெற்றியை உறுதியாக்குகின்றது. முதலீடு சிறு அளவினதாக இருப்பின், தொழிற்படும் எல்லையும் சிறு அளவினதாகவே இருக்க வேண்டும். முதலீடும், வாய்ப்பும், கையும், கையுரையுமாகும். அவை பொருந்த வேண்டும். நமது முதலீட்டை அதன் நடைமுறைச் ஆற்றலெனும் வட்டத்திற்குள் நாம் ஒருமுகப்படுத்தினால் போதுமானது. அந்த வட்டம் எத்துணை தான் எல்லை கட்டப்பட்டிருப்பினும், வளர்ந்து வரும் ஆற்றலின்