பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

ஜேம்ஸ் ஆலன்


சொகுசிற்கு வழிகாட்டுகின்ற பகட்டு ஒரு பழிச்செயலாகும். அறநெறி கொண்ட மக்கள் அக்கறையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். குவித்து வைப்பதில் பணத்தை விரயம் செய்கின்ற செல்வர் ஏழ்மையை நாடுபவராகின்றனர்; ஏனெனின், அது விரயமாகும்; விரயம், இன்மைக்கு வழிகாட்டி விடுகின்றது. இவ்வாறு கருத்தின்றிச் செலவிடப்படுகின்ற பணத்தை நன்முறையில் பயன்படுத்தலாம். ஏனெனின் ஈகை மிகவுயர்ந்தது.

பகட்டாகத் தேவையின்றி ஆடையணிவதைக் காட்டிலும் அவர்கள் கல்வியும், முன்னேற்றமும் அதிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்வர். அதன் காரணமாக இலக்கியம், கலை, விஞ்ஞானம் இவை ஊக்குவிக்கப்படுகின்றன. உண்மையான பண்புநயம் மனத்திலும், நடத்தையிலுமே இருக்கின்றது. அறத்தாலும், அறிவுக்கூர்மையாலும் அணிசெய்யப்பட்ட மனம், புறப்பகட்டாக உடலை அணிசெய்து கொள்வதால் தனது கவர்ச்சியை அதிகரித்துக் கொள்ள முடிவதில்லை. உடனடிப் பயனற்றவகையில் அணிசெய்வதில் செலவிடப்படுகின்ற பொழுதை அதைவிடப் பயன் தரும் வகையில் செலவிடலாம். பிற காரியங்களில் உள்ளதைப் போன்றே உடையிலும் எளிமையே சிறந்தது. பயனுடைமை, வசதி, உடலழகு இவற்றைப் பொறுத்த அளவில் எளிமை மேம்பாட்டின் உச்சநிலையை அடைந்து விடுகின்றது. அதோடு உண்மையான சுவையையும், பண்படுத்தப்பட்ட நடத்தை நயத்தையும் காட்டுகின்றது.

பொழுது போக்கு, வாழ்வின் இன்றியமையாத காரியங்களில் ஒன்றாகும். ஒவ்வோர் ஆண்மகனும்