பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

ஜேம்ஸ் ஆலன்


அதைக் கைக்கொண்டொழுகுவதில்லை. சில வேளைகளில் அவர்கள் இவ்வாறு செய்துவிடக் காரணம் என்னவெனில் தமக்கு எல்லாம் தெரியுமென அவர்கள் அறியாமையால் எண்ணுகின்றனர்; அவ்வாறு எண்ணுவதால், ஒரு பலகணியைத் துப்புரவு செய்வதோ தரையைத் துடைப்பதோ எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்வதாயினும் கூட அதனை அறிந்து கொள்வது இயலாது போய்விடுகின்ற ஒரு நிலையில் தம்மை வைத்துக் கொள்பவராகின்றனர்.

பொறுமையின்மையும், திறப்பாடின்மையும் மிகவும் பொதுவானதாகும். பொறுமையும், திறப்பாடும் கொண்ட மக்கட்கு உலகில் பெருமளவு வாய்ப்பிருக்கின்றது. சிறந்த வேலைப்பாட்டைப் பெறுவது எத்துணைக் கடினமானது என்பதைத் தொழில் நடத்தும் பணிமுதல்வர்கள் அறிவர். நல்ல தொழிலாளி தன்னுடைய கருவிகளைக் கொண்டோ செயலைக் கொண்டோ தனது திறமையைக் கையாள ஓரிடத்தை எப்போதும் கண்டு பிடித்தே தீருவான்.

வளப்பம் திறப்பாட்டின் விளைவாகும். அது ஆக்கத்தின் ஒரு தன்மை மூலக் கூறாகும்; ஏனெனின், வளப்பமுடைய மனிதன் என்றுமே குழப்பமடைவதில்லை. அவனுக்குப் பல வீழ்ச்சிகள் ஏற்படலாம்; ஆனால், அவன் எப்போதும் வாய்ப்பை ஏற்பவனாகவே இருப்பான். வீழ்ந்த உடனேயே தன் கால்களூன்றி எழுந்து விடுவான். ஆற்றலைப் பேணிக் காப்பதிலேயே வளப்பத்தின் அடியாதாரக் காரணம் அமைந்து கிடக்கின்றது. அது ஆற்றல் உருமாறப் பெற்றதேயாகும். ஒரு மனிதன் தனது ஆற்றலை வெறுமையாக்குகின்ற சில மனத்-