பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 66


அவனுடைய முயற்சிகள் அழிவுச் சார்புடையன ஆக்கச் சார்புடையனவல்ல; இவன் அதனால் தன்னைத் தான் அழித்துக் கொள்கின்றான்.

கபடன், பொய்யன், ஏமாற்றுக்காரன், நாணயமற்ற மனிதன் எதையும் கட்டவியலாது; ஏனெனின், கட்டுமானத்திற்கு வேண்டிய கருவிகளோ செய்முதற் பொருளோ அவனிடம் கிடையாது. ஒரு சமயத்தைத் தோற்றுவிக்கவோ ஒரு செங்கல் வீட்டைக் கட்டவோ இயலாதவாறு போன்ற ஒரு தொழில், ஒரு குணவியல்பு, ஒரு வாழ்க்கை நெறி, ஒரு வெற்றி எதையுமே அவன் உருவாக்க முடியாது. அவன் உருவாக்க முடிவதில்லை. பிறர் உருவாக்கி இருப்பவனவற்றிற்குத் தீங்கிழைத்து வீழ்த்துவதிலேயே அவனுடைய ஆற்றல்கள் அனைத்தும் திருப்பப்படுகின்றன; ஆனால், அது இயலாதுபோவதால் அவன் தன்னைத்தான் வீழ்ச்சி அடையச் செய்துகொள்கின்றான்.

சால்பின்றேல் ஆற்றலும், சிக்கனமும் இறுதியில் தோல்வியுற்றுவிடும்; ஆனால், சால்பின் சார்பிருப்பின் அவற்றின் வலிமை பெரிதும் பெருகும். ஒழுக்கக் கூறு பங்கெடுத்துக் கொள்ளாத வேளையே வாழ்வில் இல்லை. மிகச் சிறப்பான சால்பு எங்கிருப்பினும் தன்னை உணர்த்தி நிற்பதோடு கொடுக்கல் வாங்கல்கள் அனைத்திலும் தனது முத்திரையைப் பொறித்துவிடும்; வியப்பிற்குரிய அவனுடைய இசைவுச் சீராலும், நிலையமைதியாலும், வெல்ல முடியாத வலிமையாலுமே அது அவ்வாறு செய்கின்றது.