பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 68


பொய்யைப் பேசுவதோ நேர்மையிலாத ஒரு செயலைச் செய்வதோ தேவையெனத் தோன்றுகின்ற காலமும் வந்துவிடும்; ஆனால், அவ்வாறு அவா ஊட்டப் பெற்றுவிடுகின்ற ஒருவன் உறுதியற்றதும், திகைப்புற்றதுமான வேளையில் தன்னகத்திருந்தே எழுகின்ற பொய்ம்மையின் நுட்பமான சூழ்ச்சித் திறத்தை உதறியெறிந்து விட முடியவேண்டும். நடத்தைப் பிசகில் அமிழ்ந்து விடுவதைக் காட்டிலும் இழந்துவிடவும், இன்னல்படவும் சித்தமாயிருக்கின்ற வகையில் நியதியின் வழியில் உறுதியாக நிற்கவேண்டும். இந்த ஒழுக்க நெறியினைக் குறித்து இவ் வழியில்தான் ஒருவன் அறிவொளி ஊட்டப் பெற்றவனாகவும், சால்பு ஆதாயத்திற்கும், இன்பத்திற்கும் வழிகாட்டுகின்றதே அன்றி இழப்பிற்கும், துன்பத்திற்கும் அன்று எனும் உண்மையைக் கண்டு கொள்ளவும் முடியும். நாணயமும், இழப்பும் காரண காரியத் தொடர்பு கொண்டன அல்ல, கொள்ளவும் முடியாது.

மெய்ம்மைக்கு மாறாக நடப்பதைக் காட்டிலும் ஈ(தியா)கஞ் செய்ய முடிவாயிருப்பதே வாழ்வின் கடமைகள் அனைத்திலும் அறிவொளியூட்டும் வழி காட்டியாகின்றது. ஏதேனும் தன்னல நோக்கை விட்டுக் கொடுப்பதைவிடப் பொய் மொழியவோ ஏமாற்றவோ துணிகின்ற மனிதன் ஒழுக்கநெறி அறிவைப் பெறும் உரிமையைப் பறிகொடுத்தவனாகின்றான். அவன், வஞ்சகப் பக்தர்களின் நடுவே, இரண்டக நிலையான ஏமாற்றங்கள் செய்பவர்களின் நடுவே, குணவியல்பும், நன்மதிப்புமில்லா மனதர்களின் நடுவே கீழ்வரிசையில் இருப்பவனாகிறான்.

கடுமையான போட்டி நிறைந்த இந்த நாள்களில்