பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 82


களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மிகச் சிறிய தனிப்பட்ட காரியத்திலும் அவற்றை மீற இயலாது. செல்வமெனும் உலகில் ஒழுங்கமைப்பு விதி ஓர் இரும்புக்கைத் தேவையாகும். அதைத் தவறாது கடைப்பிடிப்பவன் நேரம், மனநலம், பணம் இவற்றைச் சேமிப்பவன் ஆகின்றான்.

மனித சமூகத்தில் நிலைபேறு கொண்டுள்ள ஒவ்வொரு சாதனையும் முறைப்பாடென்னும் அடிப்படையிலேயே அமைவு பெற்றிருக்கின்றது. எனவே, முறைப்பாடு பின்னிழுக்கப்படின் முன்னேற்றம் முடிவுற்று விடும் என்பது உண்மையே. சான்றாக இலக்கியத்தின் பெருஞ்சாதனைகளை எண்ணிப் பார்க்கலாம்; புகழ் சான்ற ஆசிரியர்கள், மேதகு மேதைகளின் நூல்கள், மாபெரும் கவிதைகள், எண்ணிலடங்கா உரைநடை நூல்கள், பெரும்புகழ் கொண்ட வரலாறுகள், உள்ளுயிர் தூண்டும் சொற் பொழிவுகள், மனித இனத்தின் சமூகத் தொடர்புகள், அதன் சமயங்கள், சட்டஞ் சார்ந்த அதன் கட்டளைகள், நூலறிவெனும் பரந்த சேமவளம் இவற்றையெல்லாம் எண்ணிப்பாருங்கள். மொழியின் வியப்பிற்குரிய இந்த வளப்பங்கள், ஆக்கங்கள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள். பின்பு, இவை அனைத்தும் தமது தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும் இருபத்தாறு எழுத்துகளின் முறைப்பாடான பாகுபாட்டுத் திட்டங்களையே சார்ந்திருப்பதை ஆழ்ந்து நினைத்துப் பாருங்கள். சில நிலையான விதிகளின் கண்டிப்பான எல்லைக்குள் இருப்பதால் இப்பாகுபாட்டுத் திட்டம் அழிவில்லாத, அளவில்லாத பயன்களை உடையதாயிருக்கின்றது.