பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வேண்டும் விடுதலை

விடுதலை வரலாற்றில் வீரமறவரின் முதற்பட்டியல்!

துடித்துக் கிடக்கும் தோள்மறவர்கள் அடுத்த முற்றுகைக்கு அங்காந்து கிடக்கின்றனர்!

பகைவர்கள் அஞ்சுகின்றனர் ஆட்சியினர் பரபரப்படைகின்றனர்!

ஒடியுமா பகையெலும்பு? முடியுமா அடிமை நிலை? விடியுமா தமிழகம்? படியுமா உரிமை ஒளி? - எதிர்காலமே விடை சொல்!


தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு

(நிகழ்ச்சிச் சுருக்கம்)

துரையில் கடந்த சிலை 10. (24-12-72) அன்று இரவு 2 மணியளவில் வஸலம்புரி இல்லத்தில், மாநாட்டு, அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் தலைமையில் அமைக்கப்பெற்ற செயற்குழு முடிவின் படி தென்மொழிக் கொள்கை (தமிழகப் பிரிவினை) 2ஆவது மாநாடு. மதுரையில் தி.பி. 2004. விடை 27,28 (9.10 சூன் 72) காரி ஞாயிறு இரீகல் திரையரங்கில் நடைபெறுவதென உறுதி செய்யப் பெற்றது. அதன்படி, திரு. க. வெ, நெடுஞ்சேரலாதன் (ஆசிரியர், 'தீச்சுடர்') மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவராகவும், திரு. உ, அரசுமணி செயலராகவும் திரு. க. ம. முருகுவேந்தன் துணைச் செயலராகவும் திரு. கா. தென்னவன் பொருளராகவும், திருவாளர்கள், கி. மாவேந்தன், அ. தமிழன்பன், ப. முருகவேள். ஓடை. தமிழ்ச் செல்வன், பெ. திருவேங்கடம் ஆகியோர் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.

செயற்குழு, திட்டமிட்டுக் குறித்த நாளில் மாநாடு நடைபெறவும், ஊர்வலம் முதலியன சிறப்புற நடக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்தது. மாநாட்டு வரவுக்காக, அறிக்கைகளும், பற்று முறிகளும் அச்சிடப் பெற்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்குள்ள விடுதலை இயக்க அமைப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அவற்றை அனுப்பிவைத்து, மாநாட்டுச் செய்தியைப் பரப்பவும், நன்கொடைகள் தண்டவும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. மாநாட்டுப் பொறுப்பாளர்களில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசுமணியும், திரு. சு. ம. முருகுவேந்தனும், திரு. கா. தென்னவனும், திரு. ப. முருக