பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

143

உந்துகளில் செல்வாரும் விடுதலை முழக்கங்ககளை வியப்புடன் படித்துக் கொண்டே சென்றனர். ஆசிரியர் அவர்கள் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு யானையின் வரவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தர்கள். அப்பொழுது ‘பெரியார்’ தம் மூடு வண்டியில் (van) அங்கு வந்தார். ஊர்வலத்தை ஒட்டி வண்டி நிறுத்தப் பெற்றது. ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள் உடனே சென்று வண்டியுள் ஏறி, பெரியாருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நலம் கேட்டார். பெரியார் நலம் கூறி, ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்துமாறும், தாம் அருப்புக் கோட்டை சென்று மறுநாள் மாநாட்டில் கலந்து கொள்ள வருவதாகவும் கூறிச் சென்றார். யானை வர நேரமாகும் என்று தெரிந்ததால் சரியாக 9-30 மணிக்கு ஊர்வலம் புறப்படலாம் என அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் கட்டளையிட்டார். ஊர்வலம் புறப்படுமுன் எல்லாருக்கும் அச்சிட்டு வழங்கப் பெற்றிருந்த இருபத்தேழு முழக்கங்களையும் ஊர்வலத்தினர் ஒருமுறைக்கு மும்முறை உரக்க முழங்கி விட்டுச் செல்லத் தொடங்கினர்.

ஊர்வலம் கிழக்கு நோக்கித் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருவாளர்கள். தமிழநம்பி, அரணமுறுவல், அருட்குவை, சின்னத்துரை, கதிரவன், நெடுஞ்சேரலாதன், அரசுமணி, நாவை. சிவம், ப. அறிவழகன், பொழிலன், தேன்மொழி, பிறைநுதல் முதலியோர் பகுதி பகுதியாக நின்று, உரத்த ஒலியுடனும் மிக்க ஆர்வத்துடனும் விடுதலை முழக்கங்களை முழங்கிக் கொண்டே சென்றனர். இவர்களைத் தொடர்ந்து ஊர்வலத்தினரும் முழக்கங்களைத் தெளிவாகவும் உரக்கவும் கூறிச் சென்றனர். வானம் சிறிது மப்பும் மாந்தரமுமாகவும் இருந்ததால் அன்பர்கள் சுறுசுறுப்பும் ஆர்வமும் ததும்ப முழக்கமிட்டுச் சென்றதைப் பொதுமக்களும் நின்று கவனித்துக் கேட்டும் கைத்தட்டிகளில் எழுதியிருந்தவற்றைப் படித்துக் கொண்டும் சென்றனர். ஊர்வலம் செல்லுங்கால் மாநாட்டு அறிக்கைகளும், அச்சிட்ட முழக்கங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பெற்றன.

ஊர்வலம் எவ்வகை இடையூறுமின்றி திண்டுக்கல் சாலை வழியே கிழக்கு நோக்கிச் சென்று, பின் தெற்கில் திரும்பி மேலமாசி வீதியின் கடைசிக்கு ஏறத்தாழச் சென்றுவிட்டது. அப்பொழுதுதான் யானையும் வந்தது. ஊர்வலத்தின் முன் பெருமிதமாகப் பிளிறியது. இயக்கக் கொடியுடன் யானை மேல் ஒருவரை அமர்த்தவும் யானையை ஊர்வலத்தின் முன்பு சரியாக நிற்கச் செய்யவும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் உதவிக்காவல் துறை மேலாளுநர் (D.S.P.)