பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

265

முழுமூச்சுடன் இறங்கி, ஏதாவது உருப்படியாகச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இம் முயற்சியில் மற்றவர்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்னும் கதையாகவே முடிந்துவிடும் என்று கருதவும் அஞ்சவும் வேண்டி யிருக்கிறது.

எனவே, நம் தமிழினத்தைப் பற்றி நாம் எதிர்காலத்தில் என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டு சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும் என்பது பற்றி, நாம் அனைவரும் கூடிப் பேசித் தீர்மானிப்பது, என்று நம் உ.த.மு.க. மேனிலைச் செயற்குழு தீர்மானித்து 'தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு' என்னும் ஒரு கருத்தரங்கைக் கூட்டுவதற்கு முடிவெடுத்தது.

அக் கருத்தரங்கு வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில் சென்னையில் நடைபெறவிருக்கிறது என்பது முன்னமேயே தெரிவிக்கப்பெற்றுள்ளது. அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய கருத்தரங்கு ஆகும். அக் கருத்தரங்கிற்கு, மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், தொழில் முதல்வர்கள், பல கட்சித் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள ஆடவர் பெண்டிர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நல்லபடியான, உருப்படியான, உறுதியான ஒரு முடிவெடுக்க உதவும்படி நம் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இக் கருத்தரங்கை நடத்தி முடிக்க ஏராளமான பொருள் செலவு ஆகும் என்று கருதுகிறேன். இச் செலவுகளுக்காகும் பெருந்தொகையை ஆங்காங்கு அன்பர்களிடம் நாடு முழுமையும் திரட்டிக் கொண்டிருக்க நேரமும் முயற்சியும் இன்றைய நிலையில் நமக்குப் போதாது. ஆகையால், இவ்வறிக்கையையும், முன் தமிழ்நிலம் இதழ் எண். 74-இலும், தென்மொழி சுவடி : 22, ஓலை : 10-இலும் வெளிவந்துள்ள அறிக்கையையும் கண்ணுற்ற, கண்ணுறும் அன்பர்கள், ஆதரவாளர்கள், கொள்கையுணர்வு உள்ளவர்கள், செல்வர்கள், கொடையாளிகள் ஆகிய அனைவரும் கூர்ந்து தங்களால் பேரளவு முடிந்த தொகைகளை உடனடியாக என் பெயருக்குப் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நேரிலோ அனுப்பி, இவ்வரும் பெருஞ் செயலில் பங்கு கொண்டு வரலாற்றுச் சிறப்புப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பற்றுச்