பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

299

கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இத்தேர்தலை நம்ப வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்கள். இக் கருவி எந்த அளவுக்கு இழிவுபடுத்தப்பட்டுக் கிடக்கிறதோ, அந்த அளவுக்குத் தாங்களும் கீழிறங்கி விடுகிறார்கள். அவர்களில் மிக மிகக் கீழிறங்கி நடப்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள், எனவே இந்த வகையான அரசியல் விடுதலையால், இத்தமிழையும் தமிழ் நாட்டையும், தமிழினத்தையும் எவராலும் முன்னேறச் செய்து விட முடியாது. அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதைகள்! வேண்டுமானால் அறிவறிந்த பேதைகளாக இருக்கலாம்! அதே போல் அவ்வாறு பேசிக் கொண்டிருப்பவர்கள் மக்களை ஏமாற்றும் எத்தர்கள்! வேண்டுமானால் படித்த எத்தர்கள் என்று சொல்லலாம். எனவே இப்படிப்பட்ட நிலைகளிலேயே ஈடுபட்டு ஈடுபட்டுக் காலக்கழிவு செய்பவர்களால் உண்மையான அரசியல் விடுதலையைப் பெற்றுத்தர முடியாது. அவ்வாறு பெற்றுத் தந்தாலும் அஃது அரசியல் விடுதலை, ஆகாது. இந்தியாவுக்குக் கிடைத்த விடுதலையும் இதை அல்லது இதைவிடக் கீழான ஒரு நிலையைப் போன்றதே என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, இது போன்றதொரு விடுதலையல்லாமல், உண்மையான தேர்தல் வழி, முறையான செயல்முறைகளுடன் நேர்மையான வகையிலேயே, நம் தமிழ்நாட்டுக்கு அரசியல் விடுதலையே கிடைத்தாலும் அதால் இந்த மொழியும், இனமும், நாடும் முன்னேறி விட முடியாது. ஏனெனில், தில்லி ஆண்டை தமிழக அரசியல் விடுதலையை எப்பொழுதுமே தன் கையசைவுக்குள்தான் அடக்கி வைத்திருக்க முடியும். அப்படித்தான் இந்நாட்டு அரசியல் அமைப்பியல் சட்டம் உருவாக்கம் செய்யப் பெற்று இருக்கிறது. (ஒரு வேளை தில்லி, தமிழகத்திற்கென்று தனி இறைமையும் தன்னதிகாரமும் உள்ள விடுதலையையே கொடுத்துத் தனித் தமிழ்நாடு ஆக்கினாலும், இப்பொழுதைய நிலையில் மூப்பனும், சிதம்பரமும், பழனியாண்டியும் போன்றவர்கள்தாம் இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவார்கள். அதால் மக்களுக்கு எந்த விடிவோ முன்னேற்றமோ வந்து விடாது.) எனவே, தில்லி யாட்சியிலிருந்து, அறவே விலகி, மக்களாக அமைக்கும் ஒன்றைத்தான். நாம் இப்பொழுதைக்கு அரசியல் விடுதலை என்று சொல்ல முடியும். இதை மேலும் தீவிரமான இலக்கண முறையோடு ஆராய்ந்து, இலக்கிய விளைவோடு ஒத்திட்டுப் பார்க்க வேண்டிய நிலை இப்பொழுது தேவையில்லை என்பதால் இத்துடன் இதை