பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

301

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவருமே பல்வேறு மதவுணர்வுகளாலும், பல நூற்றுக் கணக்கான சாதி உணர்வுகளாலும் ஆண்டாண்டுக் காலமாகப் பிளவுண்டு, பிரித்து வைக்கப் பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிவோம். இங்கு ஆளும் சாதியென்று ஒன்றுண்டு; ஆளப்படுகிற பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் எனப் பற்பலவுண்டு. இவையெல்லாம் அப்படி அப்படியே இருக்க, அரசியலில் மட்டும் விடுதலை பெற்றுவிட்டதாகவும், உரிமை எய்தி விட்டதாகவும் கருதிக் கொண்டு, செயல்களில் மட்டும் அவரவர் சாதி மதங்களுக் கேற்பப் போராடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டும், அதற்கேற்ப வளங்களை ஒருசார்பாகவே பங்குபோட்டுக் கொண்டும் இருப்பதால் யாருக்கு என்ன பொதுப் பயன் விளைந்து விட்டது, இந்த இந்தியாவில்? எனவே, நாளை தமிழ்நாடும் அரசியல் உரிமை பெற்றால், இதே நிலைதான் தொடர்ந்து இருக்க முடியும்? இராதென்பது எப்படி? அதற்கென்ன உறுதி?

ஆனாலும், அரசியல் விடுதலை பெற்று விட்டால்தான் நாம் இன வேறுபாடுகளைக் களைந்து கொள்ள முடியும் என்பதும், இன விடுதலை பெற்ற பின்னரே அரசியல் விடுதலை பெற்றுக் கொள்ளலாம் என்பது இயலவே இயலாது என்பதும் நாம் அறிந்தனவே! ஆனால், இன வேறுபாடுகளையும், மற்ற பொருள் நிலை வேறுபாடுகளையும், களைந்து கொள்ள விரும்புகின்ற அளவில் மக்கள் பெரும்பாலாரின் மனம் பக்குவப் பட்டு வருகின்ற அல்லது பக்குவப்பட்டு விட்ட அந்த நிலையில் தான் அரசியல் விடுதலைக்கு நாம் முயற்சி செய்தல் வேண்டும்.

அடுத்து, இங்குள்ள பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கூட நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட மதச்சேற்றுடனும் சாதிக் குப்பைகளுடனும் இரண்டறக் கலந்து ஆழமாகப் பதிந்து கிடக்கின்றதை நாம் உணர முடியும். இவற்றிலிருந்து நாம் விரும்பும் பொருளியல் விடுதலையை மீட்டெடுக்க வேண்டுமானாலும் அம்மத இழிவு நிலைகளையும் மூட நம்பிக்கைகளையும் சாதிச்சேற்றையும் நாம் கழுவித்துப்புரவு செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான். நாம் விரும்பும் பொருளியல் விடுதலையையும் உரிமைகளையும் மக்கள் சமமாகத் துய்க்க முடியும். பிறவியால் சிதறுண்டு கிடக்கும் இன வேறுபாடுகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்றாமல் அரசியல் உரிமைகளைத் துய்க்கக்கொடுப்பது ஈயம் பூசாத பித்தளை யேனத்தில் பெய்யப் பெற்ற களிம்பு உணவை உண்ண வைப்பது