பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

309

ஆனாலும் இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பிலும், ஏற்கனவே சிதைந்து கிடக்கும் தமிழின வரலாற்று நிலையிலும், இந்நிலை ஒருவாறு போற்றிக் கொள்ளக் கூடியதாக இருப்பதால், நாம் இவர்களின் வரவை, வேறு யாரையும் விட, வரவேற்கவும், வாழ்த்தவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இன்னுஞ் சொன்னால் வேறு யாரும் நாம் இவர்களை வரவேற்பது போல் – அந்த நோக்கத்திற்காக – அந்த நோக்கத்தின் இன்றியமையாமையை அவர்கள் அறியாததால் – இவர்களை வரவேற்கவும் இல்லை.

இந்நிலையில், இவர்கள் ஆட்சிக் கட்டிலேறி, மக்களியல் நிலையில், அல்லது ஆட்சியியல் நிலையில், ஏதோ சிறு சிறு தீமைத் தவிர்ப்புகளும், நன்மை விளைப்புகளும், அல்லது ஒரு சில சலுகைகளும் செய்து விடுவதாலேயே இவ் வேதுங்கெட்ட தமிழினத்தை ஈடேற்றி விடமுடியாது.

நம்மைப் பொறுத்தவரை, தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகளை மீட்பதும், தமிழ்நாட்டு விடுதலை பெறுவதுமே நம் அனைவர்க்கும் உண்டான ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். மற்ற படி சிறு சிறு ஆக்க நிலைகளெல்லாம் நம்மை மகிழ்வித்து விடவும் முடியா; நிறைவு செய்து விடவும் முடியா. இவர்களெல்லாரும் இவ்வாறின்றித், தங்கள் தங்கள் பதவிப் பேறுகளையும், இன்ப ஆக்கங்களையுமே பெரியனவாகக் கருதி மகிழ்ச்சியுறுகின்றார்களென்றால், இவர்கள் நம் இனத்திற்கான – நம் மொழிக்கான ஒட்டுமொத்தமான விடுவிப்பு எது என்பதையே வரலாற்று, இனவியல், மொழியியல் அடிப்படையில் அறியாமலிருக்கின்றார்கள் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. எனவே, நம்மைப் போன்ற ஆழமான நெஞ்ச வருத்தம் இவர்களுக்கு இருக்க முடியாது.

'நன்றறி வாரில் கயவர் திருவுடையர்; நெஞ்சத்து அவலம் இலர்' – என்னும் திருக்குறள் மொழியை நாம் மறந்தாலும் நம் நெஞ்ச அவலம் நமக்கு என்றும் எப்பொழுதும் எந்நிலையிலும் அதை நினைவூட்டிக் கொண்டே யிருக்கின்றது. நாம் எந்த நிலையில் ஆக்கம் பெற்றாலும், நம் இனம் வலிவு பெற்று, அஃதிழந்து நலன்களைப் பெறும் வரையில், அத்தகைய ஆக்கங்கள் தலைமாறி அழிந்து போய்க் கொண்டேதாம் இருக்கும் என்பதை நம் இன