பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

வேண்டும் விடுதலை

வாலை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல, 54 பாரளுமன்ற உறுப்பினர்களையே ஆதரவாளராக்கிக் கொண்ட சந்திரசேகரரை ஆட்சியில் ஏற்றி அவரைத் தம் கைப்பாவையாக ஆக்கித் தம் விருப்பத்திற்கு ஆட்டி வைத்து அசாம், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, முதலிய மாநில அரசுகளை அடியோடு குப்புறக் கவிழ்த்துக் குடியரசுத்தலைவராகிய பார்ப்பன வெங்கட்டராமனின் ஆட்சியை அமையச் செய்தார். அரசியலும். அதிகாரமும் வாய்ப்புகளும் பார்ப்பனியத்திற்கு இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் குடியரசுத் தலைவர் வெங்கடராமன் யாருக்குமே கீழான வரல்லர் என்பதைக் கடந்த இரண்டாண்டுகளாக நடந்த இந்திய ஆட்சி நாடகங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டன.

இவ்வாறான, சூழ்நிலையில், இரு காவலர்கள் வேவு பார்த்தனர் என்னும் நொண்டிச்சாக்கை அடிப்படையாக வைத்து, ஏறத்தாழ மூன்றரை மாதங்களை ஆட்சி செய்த சந்திரசேகரரையும் அண்மையில் கவிழ்த்து விட்டார், இந்த அரசியல் பத்தினியான இராசீவ்!

இந்த ஊழல் பேர்வழிக்குத் துணையாகவும் இவரின் கொள்ளைப் பணத்திற்குப் பங்காகவும், இங்கு முன்பு மூப்பனார் கூட்டமும், இக்கால் செயலவிதா, வாழைப்பாடி, திண்டிவனங்கள், குமரி அனந்தன்கள் போன்றவர்கள் கூட்டமும் செயல்பட்டன; படுகின்றன. பணம் என்றால் வாய் திறந்து வயிறு கழுவுகின்ற இப்பிணந்தின்னிக் கழுகுகள் அரசியலில் ஏதோ பெரிய அறிஞர்கள் போலவும் தேசியப் பற்றுள்ளவர்கள் போலவும் கதைநாயகனுக்கேற்ற கட்டியங்காரன்களாக நாடகம் ஆடுகின்றனர்.

அவர்களும் இவர்களைப் போன்றவர்களும் பேசுவதெல்லாம் இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும்! ஆனால் செய்வது எல்லாமே திருட்டுத்தனங்களும், பார்ப்பனியச் சூழ்ச்சிகளும் வேற்றுமைகளுமே! இந்தியாவில் அரசியலா நடைபெறுகிறது? பதவிச்சண்டைகளும், கள்ளப்பணங்களைப் பகிர்ந்து கொள்ளும் புகழ் கொள்ளைகளுந் தாமே! விளக்காக ஓரிரண்டு இடங்களில் ஓரிரண்டு நல்ல செயல்கள் இருக்கலாம் ஆனால் அவற்றால் என்ன பயன்?

முதலாளியமும் பார்ப்பனியமும் இணைந்து, சாதியத்தையும் மதவெறியையும் முன்னிறுத்தி, இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கும் அறக்கேடுகளுக்கும், காந்தியத்தையும்,