பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

79




 
நேரம் வந்து விட்டது!
படைமுகத்துக்கு வாருங்கள்!


ன்னைப் பற்றி எண்ணிப் பார்க்க எனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அப்படியே என் நாட்டைப் பற்றி- என் இனத்தைப் பற்றி என் மொழியைப் பற்றி எண்ணிப் பார்க்கவும், கருத்தறிவிக்கவும் எனக்கு முழு உரிமை உண்டு. இந்த இயற்கை உணர்வின் அடிப்படையிலேயே பிறரையும் எண்ணிப் பார்க்கின்றேன். என் போல் பிறரும் அப்படி எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பர் என்பதையும் உணர்கின்றேன். அவ்வாறு எண்ணிப் பார்த்துக் கூறும் அவர்களின் கருத்துகளிலும் உண்மை இருக்கவே செய்யும் என்பதையும்கூட என்னால் அறிந்து கொள்ளமுடியும் ஆனால் இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மளவில் தாமே எண்ணிப் பார்க்கும். இயல் முறையை விடுத்து, என்னைப் பற்றிப் பிறரும், பிறரைப் பற்றி நானும் எண்ணுகின்ற முறையில் எல்லாமே இயற்கைக்குப் பொருத்தமாக இருந்து விடும் என்று எவரும் கூறிவிட முடியாது. நாட்டைப் பற்றிய செய்தியிலும் மொழியைப் பற்றிய செய்தியிலும் இனத்தைப் பற்றிய செய்தியிலும்கூட இந்த உண்மைகளைத்தான் மாந்தன் கடைப்பிடித்தாக வேண்டும். அல்லாக்கால் குழப்பங்கள் மிஞ்சும்; ஒன்றுக்கொன்று போராட்டங்கள் மிகும்; ஒன்றால் ஒன்றுக்கு நேரும் அழிவுகள் தவிர்க்க முடியாதன வாகிவிடும்.

நான் மொழியால் தமிழன்; எனவே இனத்தாலும் தமிழன், இன்னுஞ்சொன்னால் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற