பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

87

கொள்ள விருக்கும் வகையையும் முன் கூட்டியே தென்மொழிக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும்.

மாநாட்டின் பொழுதோ, ஊர்வலத்தின் பொழுதோ அன்பர்கள் தாங்களாகவோ, பிறர் தூண்டுதலாகவோ எவ்வகைப் பரபரப்பான நிகழ்ச்சிகளிலோ, போராட்டப் பூசல்களிலோ ஈடுபட வேண்டா என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநாட்டின் திட்டவட்டமான செயல் முறைகள் தீர்மானமாக மாநாட்டின் முடிவில் அறிவிக்கப்பெறும். அன்பர்கள் அவ்வறிவிப்பு வரை அமைதியைக் கடைப் பிடிக்கக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

அடுத்த தென்மொழி இதழில் மேலும் சில விளக்கங்கள் அறிவிக்கப்பெறும், மறவாதீர்கள்! ஒன்றை மட்டும் தவறாமல் நினைவில் வையுங்கள்! மாநாட்டிற்கு மட்டும் எல்லோரும் தவறாமல் வந்துவிட வேண்டும்.

- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972


தென்மொழிக்கொள்கைச் செயற்பாட்டு மாநாடு அறிக்கை
திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் (10-6-72, 11-6-72) ஆகிய நாட்களில் புறப்படுங்கள் திருச்சிக்கு!

'தென்மொழி' எனும் இதழ்க்கு இரண்டு கொள்கைகள் உண்டு. 1. தமிழன் தன் மொழியாலும் இனத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது 2. தமிழன் தன் நிலத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது.

மொழி விடுதலையும் இன விடுதலையும்:

உலகிலேயே முதன்மையானதும், ஆரியம், இலத்தீன் கிரேக்கம் சாக்சானியம் முதலிய உலகப் பழம்பெரும் மொழிகளுக்கெல்லாம் தாயானதும், பழம் இலெமுரியாக் கண்டத்து. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் (50,000) ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றியதும். முழு வளம் பெற்றதும் இன்றைய அறிவியலுக்கும் இனி வரப்போகும் அறிவியல் வளர்ச்சிக்கும் முழுதும் ஈடு கொடுப்பதுமாகிய நம் தமிழ் மொழி, கடந்த மூவாயிரமாண்டுகளாக ஆரியத்தாலும் பல வேற்று இன மொழிகளாலும் சிதைக்கப்பெற்றுத் தன் உருவிழந்து ஒலியிழந்ததாலும் அடிமைப்பட்டுத் தன் இனத்தையும் அடிமைப்படுத்தித் தட்டுக்கெட்டுத் தடுமாறி இன்று ஏதோ ஒரு