பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேண்டும் விடுதலை

கடல் வளமும், தமிழகத்துள் கொஞ்ச நஞ்ச மல்ல! இருப்பினும் இங்குள்ள தமிழன் வடநாட்டுச் சோம்பேறிகளுக்காகத் தன் வயிற்றைக் கட்டித் தீரவேண்டியிருக்கின்றது. அவர்கள் கொட்டிக் கொள்ள இவன் உழைத்துச் சாகவேண்டியிருக்கின்றது.

இப்படி அரசியலாலும் பொருளியலாலும் அடிமைப்பட்டுக் தன் திலையினில் என்றென்றும் ஏழையாகவே இருக்கும் தென்னாட்டுத் தமிழன்- திரவிடன் தன் இனத்தாலும் மொழி யாலும் ஒன்று பட்டு எழுச்சி கொள்ளாதவாறு பிரித்தாளப்பட்டும், அதிகாரத்தால் மடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கின்றான்.

தென்மொழிப் போராட்டம்!

இவ்வாறான அடிமை நிலைகளை மாற்றத் தென்மொழி இதழ் தூய பொதுவுணர்வுடன் கடந்த பதின்னான்கு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றது.

'தென்மொழி என்பது ஒர் இதழன்று ஓர் இயக்கம்' என்னுமாறு அதன் கொள்கைகள் வளர்ச்சியுற்றுச் செம்மாந்து. நிற்கின்றன. அதற்கென ஒரு கூட்டம்! அதற்கென ஓர் எழுச்சி! அதற்கென ஒரு பாசறை! அதன் செயலாண்மைத் திறம் தனி! அதன் படை மறவர்களின் போராட்டம் தனி! அக முகமாக அவர்கள் செய்துவரும் நூற்றுக்கணக்கான முயற்சிகளின் இறுதிப் பயனாக அவர்களின் புறமுக முயற்சி இப்பொழுது முகிழ்ந்துள்ளது!

ஆம்; அதுதான் வரும் மாதம் 10,11-ஆம் நாட்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கும் மாநாடு.

(10-6-72 காலை 7 மணி முதல் 12வரை ஊர்வலம். ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து புறப்படும்) அன்று மாலை 2 மணிக்குக் குமுகாய மாநாடு தொடங்கும். இரவு 'எந்நாளோ?' - கொள்கை நாடகம்.

11-6-72 காலை 8 மணி அரசியல் மாநாடு.

இரண்டு நாள் முடிவிலும் வரலாற்றுச் சிறப்புடைய இரண்டு சிறந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே அம்மாநாடு ஒரு செயல் அறிவிப்பு மாநாடு: அஃது ஓர் உரிமைப் போராட்ட மாநாடு அஃது ஓர் விடுதலை மாநாடு!

அது தாழ்வுற்ற தமிழர்களுக்கு விடிவு காணப் புறப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடித் தங்கள் செயல் திட்டங்கள் பற்றி ஆராயும் மாநாடு!