பக்கம்:வைணமும் தமிழும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

85


என்கின்றாள். ‘நானோ முடியா நின்றேன்; இனி உனக்கு இரட்சகராவாரைத் தேடிக்கொள்’ என்கின்றாள்.

இவ்விடத்தில் ஒர் ஐதிகம் : பெரிய திருமலை நம்பி என்னும் ஆசிரியர் 'வெண்ணெய்க்காடும் பிள்ளை' என்ற கிருட்டினத் திருமேனியை வழிபாடு செய்து வந்தார். அவர் திருவாராதனம் படைக்க ஆற்றலற்றவராய் அந்திமதசை அடைந்தார்; பெருமாள் சந்நிதி முன்பே தண்டம் சமர்ப்பித்துத் திருத்திரையை நீக்கச் செய்து “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்; இனி உனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே” என்று கை கூப்பி விண்ணப்பம் செய்தாராம்."அடியேன் ஆசாரியன் திருவடி அடையா நின்றேன்; இனித்திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக் கொள்வாய்” என்பது குறிப்பு.

விரிவஞ்சி ஏனைய பாசுரங்களின் நயங்கள் விடப்பெற்றன.