பக்கம்:வைணமும் தமிழும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4. பன்னிரு ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் பன்னிருவர். எம்பெருமானின் திருக்குணங்களில் ஆழங்கால்பட்டுத் தம்மை மறந்த நிலையில் இருந்தமையால் 'ஆழ்வார்கள்' என்ற திருப்பெயரைப் பெற்றுத் திகழ்ந்தனர். இதனைக் கவிஞர் நாரா. நாச்சியப்பன்,

அண்ணலை மேக வண்ணன்
ஆகிய பெருமாள் தன்னை
எண்ணியே நாளும் நெஞ்சில்
இருத்தியே அன்பில் ஆழ்ந்து
நண்ணியே நின்ற தாலே
நல்முற ஆழ்வார் என்று
திண்ணமாய்ப் போற்றப் பெற்றார்
செல்வர்பன் னிருவர் தாமே.[1]

என்று கூறுவார். இவர்கள் வரலாற்றைக் கால வரலாற்றின்படி ஈண்டுக் கூறுவேன்.

(1-3). முதலாழ்வார்கள் : இவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற திருப்பெயரினர் மூவர். இவர்கள் மூவரும் அயோநிஜர்களாய் (யோநி வழிப் பிறவாதவர்களாய்) ஒர் ஐப்பசித் திங்களில் அடுத்தடுத்த நாட்களில் அவதரித்தனர் என்பது குருபரம்பரைச் செய்தி. அதாவது பொய்கையார்


  1. ஆழ்வார்களின் ஆராஅமுது (கழகம்); சிறப்புப் பாயிரமாலை-1