பக்கம்:வைணமும் தமிழும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

97


சேனை முதலியார்(விஷ்வக்சேனர்) எழுந்தருளி 'பஞ்சசம்ஸ்காரம்' முதலிய சடங்குகளைச் செய்து வைத்தார் என்று நம்புவர் வைணவப் பெருமக்கள். திருமணத்தில் விருப்பமற்று மாணியாக நின்று திவ்விய தேசங்கட்குச் சென்று எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்யக் கருதி முதலில் கோயில் என வழங்கும் 'திருவரங்கத்தை' அடைந்தார். அழகிய மணவாளனின் வடிவழகினால் கவரப்பற்று திருவரங்கத்திலேயே தங்கி விட்டார். திருநந்தவனம் அமைத்து திருத்துழாய் மாலைகள், பல்வேறு பூ மாலை வகைகள் முதலியவற்றைத் தயாரித்து அரங்க நகர் அப்பனுக்குச் சமர்ப்பிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு நின்றார். தமது நிலைக்கேற்ப அந்தணர் திருமாளிகையில் அன்னபிட்சை வாங்கி அமுது செய்துவந்தார்.

இவர் வாழ்வில் ஏற்பட்ட 'மாற்றம் தேவதேவி' என்ற விலைமாதின் வலையில் சிக்கியது.'பொன்வட்டில் களவு' என்ற நிகழ்ச்சியை உண்டாக்கி எம்பெருமான் ஆழ்வாரை அந்த வலையினின்றும் விடுவித்தது இவர்தம் வாழ்வில் நேரிட்ட அற்புத நிகழ்ச்சி பிறகு பெரியோர்களின் யோசனைப்படி தாம் செய்த பிழையை போக்கும் கழுவாயாக அடியார்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தை உட்கொண்டு தூய்மையானார் அடியர்க்கு அடிமைபூண்டு ஒழுகி அதன்காரணமாகத் 'தொண்டரடிப்பொடி' என்ற திருநாமம் பெற்றனர். இந்த ஆழ்வார் 105 ஆண்டுகள் வாழ்ந்து அதன்பிறகு நலம் அந்தம் இல்லதோர் நாட்டை அடைந்ததாகப் பெரியோர்கள் பணிப்பர்.

இவரது அருளிச் செயல்கள்: இந்த ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள் (1) திருமாலை (45 பாசுரங்கள்), (2) திருப்பள்ளி எழுச்சி (10 பாசுரங்கள்)என்பவை. அறுசீர் விருத்தத்தாலாயது இது முதலாயிரத்தில் திருச்சந்த