பக்கம்:வைணமும் தமிழும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

99


என்பது. இளமையிலிருந்தே குலசேகரர் திருமால் பக்தியில் தலைசிறந்து விளங்கினார். இளமையிலேயே அரசுரிமையை வெறுத்துத் திருவரங்கம் சென்று திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டனர் என்று குருபரம்பரை கூறும். தம் திருமகனாருக்குப் பட்டம் கட்டிவிட்டுத் துறவுபூண்டனர் என்று செப்பும் திவ்விய சூரி சரிதம். தாம் அரசு புரிந்த காலத்தில் அரவணையில் பள்ளிகொண்ட எம்பெருமானையும் அவனடியார்களையும் பெரிதும் ஆதரித்து வந்தார் ஆழ்வார். இதன் காரணத்தால்தான் இவருக்கு உலக பற்றின்மை ஏற்பட்டது என்று கருதி அரசர்க்கு அடியார்களின்மீது ஒரு வெறுப்புண்டாக ஒரு திட்டம் வகுத்தனர் அமைச்சர்கள். அரண்மனையில் களவு போன அரதனமாலையைக் கவர்ந்தவர்கள் அடியார்கள் என்று அவர்கள்மீது ஒர் அடாப் பழியைச் சுமத்தினர். ஆயின் ஆழ்வார் பரமனடியார் ஒருபோதும் அது செய்யார் என்று பாம்புக் குடத்தில் கைவிட்டு சூளுறவு செய்து அவ்வடியார் பெருமையை நிலை நாட்டியதை,

ஆரம் கெடப்பரன் அன்பர்கொள்
ளார் என்(று) அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பின்கை
இட்டவன் மாற்றலரை
வீரம் கொடுத்த செங்கோல்கொல்லி
காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி
வேந்த்ர் சிகாமணியே.[1]

என்ற பாசுரத்தின் மூலம் அறியலாம்.


  1. தனியன் = மணக்கால்நம்பி அருளியது.