பக்கம்:வைணமும் தமிழும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வைணவமும் தமிழும்



இவரது அருளிச்செயல் : அரங்கநகர் அப்பன்மீது பாடிய பத்துப் பாசுரங்கள் கொண்ட 'அமலனாதிபிரான்' என்ற பிரபந்தம். இது நாலாயிரத்தில் முதலாயிரத்தின் இறுதியில் ‘கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு' முன்னர் இடம் பெற்றுள்ளது.

இவரது காலம் : இப் பூவுலகில் இந்த ஆழ்வார் நடையாடினகாலம் 50 ஆண்டுகள் தொண்டரடிப் பொடியாழ்வார் வாழ்ந்த காலமே இவர் வாழ்ந்த காலம் என்பதாகக் கருதுவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார்.[1]

(8). திருமங்கையாழ்வார் : சோழ மண்டலத்தில் 'திருவாலிநாடு' என்பது ஒரு பகுதி. அப்பகுதியில் 'குறையலூர்' என்பது ஒர் ஊர். அவ்வூரில் கள்ளர் குலத்தில் திருமாலின் 'சார்ங்கம்' என்ற வில்லின் கூறாகக் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்ததாகக் கொள்வர் வைணவப்பெருமக்கள். பிறந்த குழந்தை நீலநிறமாக இருந்தது பற்றி 'நீலன்' என்ற பெயர் வழங்கியது. பெற்றோர் இட்ட பெயர் 'கலியன்' என்பது. இத்திருநாமத்துடன் வளர்ந்து அறிவு, ஆற்றல்கள் நிரம்பப் பெற்றவராய் தக்க பருவம் வந்ததும் தம் தந்தையின் உரிமைகளைப் பெற்றுத் தாமே ஆலி நாட்டின் தலைவராகவும், சோனாட்டரசன் கீழ்த் தானைத் தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார். திருநாங்கூர் பகுதியில்[2] ‘அண்ணன் கோயில்’ என வழங்கும் 'திருவெள்ளக்குளம்' என்னும் திருப்பதியில் மருத்துவத்தொழிலை மேற்கொண்


  1. ஆழ்வார்கள் கால நிலை-பக். 157
  2. இப்பகுதியில் சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் 11 தேசங்கள் அடங்கியுள்ளன.