பக்கம்:வைணமும் தமிழும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

137


இடத்து 'ஈடு' என்ற சொல் ஒப்பு என்ற பொருளில் வந்திருத்தல் போற்றத்தக்கது. ஈடு : கவசம். கவசமானது உடலைக் காத்தல் போன்று முப்பத்தாறாயிரப்படி என்ற இந்த வியாக்கியானமும் கற்போராலும், எழுதுவோராலும் வேற்று மக்களாலும் தன்னிலை திரிந்து மாறுபடாதபடி திருவாய்மொழியைக் காத்து நிற்றலின் இவ் வியாக்கியானத்திற்கு ஈடு என்ற தனிச் சிறப்புப் பெயரினை நம் பெருமக்கள் வைத்து வழங்கினர். இனி, இது நம்பிள்ளை நாடோறும் காலட்சேபத்தில் அருளிச் செய்தனவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளையால் எழுதி வைக்கப்பட்டதாதலின் இதனை 'ஈடு' என்று வழங்கினர் எனக் கொள்ளலும் பொருந்தும். இடுதல் - எழுதுதல் இனி இது சுருதப் பிரகாசிகையினை ஒத்திருத்தலின் இதனை 'ஈடு' என்று வழங்கினர் என்றும், தன்னைக் கற்பார் எல்லாரையும், இறைவனிடத்து ஈடுபடச் செய்வதாதலின் ஈடு என்று வழங்கினர் என்றும் கூறுவதுண்டு. நம்பிள்ளை நாள்தோறும் காலட்சேபத்தில் சொல்லியது ஆதலானும் இதற்கு ஆசிரியர் நம்பிள்ளையேயாதலானும் அப் பெரியாரின் திருப்பெயரைச் சேர்த்து இதனை நம்பிள்ளை ஈடு என்றும் வழங்குவர். இது பற்றியும் ஒரு வரலாறு உண்டு.

வரலாறு இது : வடக்குத் திருவீதிப் பிள்ளையின் ஆசாரியர் நம்பிள்ளை, ஒரு முறை நம்பிள்ளை திருவாய்மொழி பற்றி நாள்தோறும் அருளிச் செய்து கொண்டுவரும் உரைகளைக் கேட்டுக் குறிப்பெடுத்து வைத்தவற்றைத் தனியே ஏடுகளில் விரித்து எழுதிவரலாயினார். அவ்வாறு எழுதிவைத்த குறிப்பின் விரிவே 'ஈடு முப்பாத்தாறாயிரப்படி' என்பது. தம் ஆசாரியரின் உரை முற்றுப் பெற்றதும் ஒரு நாள் தாம்