பக்கம்:வைணமும் தமிழும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

வைணவமும் தமிழும்


மற்றவர்களைப் போலவே இப்படிக் கஷ்டப்படுத்துகின்றானே! என்றாராம்” அதற்கு அவர் “நீயாள வளையாள மாட்டோமே” (பெரிதிரு. 3:6:9) என்பதன்றோ கலியன்பாசுரம்? என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளியபின் நஞ்சீயர், நம்பிள்ளையை நோக்கி “பார்த்திரா இவருடைய எண்ணத்தை ? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச்செய்து மகிழ்ந்தாராம்.

(11). எறும்பியப்பா : சோளசிங்கபுரத்திற்கருகிலுள்ள (சோளிங்கர்) எறும்பி என்ற ஊரில் அவதரித்தவர், மணவாள மாமுனிகளின் திருவடிசம்பந்தி, இவருடைய ஆசாரியரான மாமுனிகள் விஷயமாக “வரவரமுனி சதகம், பூர்வ தினசரியை, உத்தரதினசரியை, விலட்சன மோட்சாதிகாரி நிர்ணயம், சுப்ரபாதம், சம்பூப் பிரபந்தம், ஆர்த்திப் பிரபந்தம்” முதலிய கிரந்தங்களைச் செய்து தலைக்கட்டித் தம் ஆசாரியரான சீயர் சந்நிதிக்கு வந்தார். சீயரும் “அபிமான நிஷ்டராகில் இப்படி இருக்க வேண்டாவோ?" என்று உகந்தருளி அப்பாவை எழுந்தருளச் செய்தார். அங்ஙனமே அப்பாவும் எழுந்தருளிச் சீயர் திருவடிகளில் அடிமை செய்து கொண்டு வாழ்ந்தார். பின்னர் தம் சீடர்களுக்குத் தம் “ஆசாரிய கிருபாலப்த மால, விலட்சணமோட்சாதிகாரி நிர்ணயம்” முதலிய கிரந்தங்களை பிரசாதித்தருளினர்.

(12). கூரநாராயணசீயர்: இவர் எம்பாரின் திருக்குமாரர். ஆசாரியர் : பெரிய பட்டர் சீடர்கள் : திருக்குருகைப்பிரான் சீயர்,சேமஞ்சீயர், சுந்தரபாண்டியதேவன். வேறு திருநாமங்கள்: நலந்திகழ் நாராயணசியர், சீரங்க நாராயணசீயர், இவர் திருவல்லிக்கேணி முதலான பல திருக்கோயில்களில் திருப்பணி செய்தவர், அருளிச்செயல்கள்: “உபநிஷத்கூர நாராயண - பாஷியம், தோத்திரவியாக்கியானம், சுதர்சன சதகம்" ஆகியவை.