பக்கம்:வைணமும் தமிழும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

199


உலகப் பாதுகாப்பில் சிந்தை செலுத்தி உறங்குவான்போல் யோகத்தில் ஆழ்ந்து கிடப்பார் இந்த வியூகாவதாரங்களைப் பற்றிய குறிப்புகளை ஆழ்வார் பாசுரங்களில் காணலாம்.

(ii) சங்கர்ஷணர் : ஞானம், பலம் என்ற இரண்டு குணங்களோடு கூடியிருப்பார். இவர் பிரகிருதிக்குள் உயிர்த் தத்துவத்திற்குத் தலைவனாகி நிற்பார். இந்தத் தத்துவத்திற்குப் பிரகிருதியினின்றும் வேறாக்கி பிரத்யும்நர் நிலையை அடைந்து வேதம் முதலிய சாத்திரங்களை வெளியிடுவார். உலக அழிப்பிற்கும் காரணமாக இருப்பவரும் இவரேயாவார்.

(iii) பிரத்யும்நர் : இவர் ஐசுவரியம், வீரியம் ஆகிய இரண்டு குணங்கள் பொருந்தியிருப்பவர். இவர் ஞானத்திற்கு ஊற்றுவாயான மனம் என்ற தத்துவத்திற்குத் தலைவராக இருப்பார்.மேலும் இவர் சாத்திரமுறைப்படி ஒழுக வேண்டிய தர்மோபதேசத்தையும் சுத்தவர்க்க சிருஷ்டியையும் செய்பவ ராக இருப்பார்.

(iv)அநிருத்தர்: சக்தி,தேஜஸ் என்ற இரண்டு குணங்க ளோடும் கூடியவர். இவர் உலகப் பாதுகாப்பிற்கும் உயிர்கள் ஈடேறுவதற்கும் தகுதியான தத்துவஞானங்களைக் கொடுத் தற்கும் காலப் படைப்பிற்கும் மிச்ரவர்க்க சிருஷ்டிக்கும் உரியவராக இருப்பார்.

கிளை வியூகங்கள் : மேற்குறிப்பிட்ட நான்கு வியூகங்கள் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரிந்து நிற்கும். வியூக வாசுதேவரிடத் தினின்று கேசவன், நாராயணன், மாதவன் என்ற மூவரும் பிரிவர். சங்கர்ஷணரிடத்திருந்து கோவிந்தன், விஷ்ணு,