பக்கம்:வைணமும் தமிழும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

201


வராகம்” போன்ற திர்யக் (= விலங்கு) அவதாரங்களும் குப்ஜாமரம்(குட்டைமாமரம்) முதலான தாவரவடிவங்களும் அடங்கும். முக்கிய அவதாரங்கள் யாவும் ஒரு விளக்கினின்றும் கொளுத்திய மற்றொரு விளக்கு தனக்குக் காரணமான விளக்கின் தன்மைகளைப் பெற்றிருக்குமாப்போலே அசாதாரண விக்கிரகத்தின் தன்மையைக் கொண்டிருத்தலால் முமுட்சுகளுக்கு உபாசிக்கத் தக்கவையாக அமைகின்றன.

இந்த இரண்டு வகை அவதாரங்களும் எம்பெருமானின் இச்சையாலே ஏற்பட்டவையாகும். ஈசுவரனின் அவதாரங் களின் பலன் அடைந்தாரைக் காத்தல் அவர்தம் விரோதிகளைப் போக்கல், வைதிக தருமத்தை நிலைநிறுத்தல்15 ஆகிய மூன்றுமாகும்.

(ஈ) அந்தர்யாமித்துவம் : சேதநர்களின் உள்ளே புக்கிருந்து அவர்களுடைய எல்லாச் செயல்கட்கும் தான் ஏவுபவனாக இருக்கும் நிலையாகும். அதாவது நல்வினை காரணமாக துறக்கம் அடைதல். தீவினைகாரணமாக நரகம் புகுதல்,நல்வினை தீவினைகளாகிய இரண்டின் காரணமாக கருப்பத்தில் புகுதல் முதலிய TT நிலைகளிலும் எல்லாச் சேதநர்க்கும் ஆன்மாவிற்குள்ளே தனது சொரூபத்தாலே வியாபித்து நின்று அவர்கட்குத் துணையாய் அவர்களை ஒருகாலும் விடாமல் அந்தராத்மாவாய் இருக்கும் இருப்பே இது. சேதநர்க்குத் தியானருசி பிறக்கும்போது தியானத்திற்கு உரியவனாதற்காகவும் அவர்களைக் காப்பதற்காகவும் அழகே வடிவெடுத்தாற்போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பெற்றவனாய்ப் பெரிய பிராட்டியரோடு கட்டை விரல் அளவாய் (அங்குஷ்ட


15. கீதை 4:8


15. கீதை 4:8