பக்கம்:வைணமும் தமிழும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ மந்திரங்கள்

219


பட்டதாகிய இப்பற்றுதலில் (அதாவது வேறு உபாயத்தில்) இவனுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. இதனால் 'ஆகிஞ் சன்னியம்' நழுவி விடும். ஆதலின் இப்பற்றுதல் உபாயமன்று என்பதை 'ஏக' என்ற பதத்தில் வெளியிடுகின்றான் பகவான். ஆக, இச் சேதநனுக்கு எம்பெருமான் உபாயப் பொருளா யிருப்பினும் ஆகிஞ்சன்னியம், அநந்யகதித்துவம் ஆகிய இரண்டும் கைகூடுதற்பொருட்டு இவன் மற்ற உபாயங்களை விடுகையும், அவனையே உபாயமாகப் பற்றுகையும், அவனைப் பற்றும் பற்றுகையை உபாயமாக நினையாமையும், இவனுக்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாகும். இந்த ஆகிஞ்சன்னி யமும், அநந்யகதித்துவமும் சித்திப்பதற்காக இவன் செய்ய வேண்டுவன இவையேயாகும். இந்த மந்திரத்தின் முன் வாக்கியம் இவற்றையே தெரிவிக்கின்றது.

(4). சேதநன் இன்றியமையாது செய்ய வேண்டுவது பகவானாகிய உபாயத்தைத் தனக்கு உபாயமாகப் பற்றி இருத்தலேயாகும். இதனை மற்ற உபாயங்களை விடுதலாகின்ற அங்கத்தோடு சேர்த்தே விதிக்கின்றான். இதன் விளக்கம் மற்ற உபாயங்களைச் செய்தற்கேற்ற அறிவு ஆற்றல் உடையவர்கள் மற்ற உபாயங்களைச் செய்தேயாக வேண்டும் என்றும், அவை அற்றவர்களே எம்பெருமானாகின்ற தன்னை உபயமாகப் பற்ற வேண்டும் என்றும் அவன் கூறுகின்றான் என்பதாகச் சில ஆசாரியப் பெருமக்கள் கருதுகின்றனர். இஃது 'அநுவாத பட்சம்' என்று கூறப்பெறும். ஆனால் பிள்ளை உலக ஆசிரியர் அங்ஙனம் திருவுள்ளம் பற்றாது வேறு விதமாகக் கருதுவர். அவர் “மற்ற உபாயங்களைச் செய்வதற்கு அறிவு ஆற்றல்கள் தமக்கு இருப்பினும், ‘நம:' பதத்தில் சொல்லுகிறபடி தம்