பக்கம்:வைணமும் தமிழும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

வைணவமும் தமிழும்


அத்தியந்த பாரதந்திரியத்திய 14நிலையை அறிந்தே சான்றோர், அவற்றை விட்டே எம்பெருமானைப் பற்றுதல் பொருத்த முடையது” எனக் கருதுவர். இதுவே 'விதிபட்சம்' ஆகும்.

(5). விருப்பத்தினால் நிகழக்கூடியதான இந்தப் பிரபத்தி சாதனத்திற்கு “இதைப்பற்று” என்ற விதியும் தேவை. சுவையுள்ள பாலை நோய்க்கு மருந்தாகக் கொள்ளும்படி கூறினால் நோயாளி அதை விரைவாக உட்கொள்ளுவதற்கு இடம் உண்டாகும் அல்லவா? அங்ஙனமே சொரூபத்திற்குச் சேராததாயும், சிரமப்பட்டுச் செய்யக் கூடியதாயும் உள்ள மற்ற உபாயங்களைப் போலல்லாமல் எளிதாகச் செய்யக்கூடியதாயும் விரும்பத்தக்கதாயுமுள்ள இவ்வுபாய்த்திற்குச் “செய்’ என்னும் கட்டளையும் இட்டால் இதனை விரைவில் மேற் கொள்ளுவதற்கு இடம் தந்து நிற்கும் அல்லவா?


14. அத்தியந்தபார தந்திரியம்- விசேடமாய்ப் பகவானுக்கு வசப்பட்டிருத்தல்.