பக்கம்:வைணமும் தமிழும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

வைணவமும் தமிழும்


(ii) இரட்சக- இரட்சிய சம்பந்தம்: உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித்தமையைக் கூறும் பெரியதிருமொழியிலுள்ள “மைந்நின்ற”(16) என்ற பதிகத்தில் திருமங்கை மன்னனின் திருவாக்குகள் (ஒன்பது பாசுரங்கள்). இந்த உறவினைத் தெளிவாக விளக்குகின்றன. இவற்றுள்,

          மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
              தானவரும் மற்றும் எல்லாம்
          உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
              தான்விழுங்கி உய்யக்கொண்ட கண்ணாளன் (7)

என்ற பாசுரத்தில் இறைவன் (இரட்சகன்) உலகினை (இரட்சித்த) செயலை விளக்கும் போக்கில் இந்த உறவு குறிப்பிடப் பெறுகின்றது “வாளால்அறுத்து” (5:4) என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் சீவான்மாக்களுக்குத் துன்பங்களைக் கொடுப்பதும் இரட்சிக்கும் வகையைச் சார்ந்த தாகும் என்பதை விளக்குகின்றது.

(iii)சேஷி-சேஷ உறவு வீற்றிருந்து (45) என்ற திருவாய் மொழியில்,

          உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
              இடந்தும் கிடந்தும் நின்றும்
          கொண்ட கோலத் தொடுவீற்.
              றிருந்தும் மணங்கூடியும்
          கண்ட வாற்றால் தனதே
              உலகென நின்றான்தன்னை
          வண்டமிழ் நூற்க நோற்றேன்
              அடியார்க்கு இன்ப மாரியே. (10)