பக்கம்:வைணமும் தமிழும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

229


கண்டுகளிப்பெய்துகின்றார் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்த ஒன்பது உறவுகளைக் குறிப்பிடும் ஆழ்வார்கள் பாசுரம் நிறைய உள்ளன. விரிவஞ்சி ஒவ்வோர் உறவுக்கும் ஒரு பாசுரம் வீதம் காட்டுவேன்.

(i) தந்தை-தனயன் உறவு :- இதனை அடியிற்கானும் பாசுரத்தில் காணலாம்.

        எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்கும்
        தம்பி ரனைதண் தாமரைக் கண்ணனை
        கொம்ப ராவுதுண் னேரிடை மார்வனை
(திருவாய் 1-10:3)

என்று கூறுவர் நம்மாழ்வார். எம்பெருமான் தன்னை, “எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை” என்று ஆழ்வார் அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம் பெருமான் “ இப்படி ஏத்துகின்றவன் ஆர்?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் ‘தண்தாமரைக் கண்ணனை’ என்று மேலும் சிறப்பிக்கின்றார். குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணம் இல்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார் கடாட்சிக்கச் செய்ய வல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து “கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை” என்று மேலும் சிறப்பிக்கின்றார்

“தருதுயரம் தடாயேல்” (5:1) என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் இந்த உறவினைக் குறிப்பிடுகின்றது.


8. அதிகம் வேண்டுவோர் நவவித சம்பந்தம் என்ற நூலில் காணலாம். (கழகத்தில் கிடைக்கும்)