பக்கம்:வைணமும் தமிழும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வைணவமும் தமிழும்


      எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
          எனக்கரசு என்னுடை வாணாள் (1.1:6)

என்பது பாசுரம், “எனக்குப் பல உபகாரம் புரிந்தவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவு முறையுமானவனும், என்னை ஆண்டவனும், என்னுடைய உயிருக்கு உயிரானவனும், அவனே என்கின்றார். இதில் “ஈசுவரனே இவ்வான்மாக்களுக்கு எல்லாவித உறவுமாகின்றான்” என்பது இத்தொடரின் “தேர்ந்த பொருள்” என்பது மணவாளமாமுனிகளின் உரைக்குறிப்பு. (முமுட்சு 102) இதனைப் பிள்ளை உலக ஆசிரியர் அருளிச் செய்த ‘நவவித சம்பந்தம்’ என்ற நூலில் தெளிவாகக்காணலாம்.

இந்த நவவிதசம்பந்தம் குலசேகரப் பெருமாள் அருளிய வித்துவக் கோட்டம்மான் திருமொழியில் (5-ஆம் திருமொழி) அடங்கிக்கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயினர்.

இந்த நவவிதசம்பந்தம்பற்றிய கருத்துகள்தாம் பாரதி யாருக்கு ‘கண்ணன்பாட்டு' படைப்பதற்கு வழி காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இஷட தெய்வத்தைப் வழிபடுகடவுளைப் பல்வேறு பாவனைகளால் வழிபடலாம் என்று நம் நாட்டுப் பக்திப் பனுவல்கள் பகர் கின்றன. ஆழ்வார் பாசுரங்களிலும் எம்பெருமானைத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று பேசப்பெற்றிருப்பதையும் இவர் கண்டிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பாரதியார் பல்வேறு உறவுகளில் கண்ணனைக்


7. அஷ்டாதச இரகசியங்கள் (பதினெட்டு இரகசியங்கள்) என் தொகுப்பில் 11-வது நூல்.