பக்கம்:வைணமும் தமிழும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

231


என்ற பாசுரத்தில் 'தனதே உலகென நின்றான் தன்னை’ என்பதால் சேஷித்துவமும், ’வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன. சேஷி-தலைவன் சேஷன்-அடிமை.

குலசேகரப்பெருமாள் அருளிய 'செந்தழலே வந்து' (5; 6) என்ற பாசுரத்தில் 'ஆண்டான்-அடிமை' உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி நாயக-நாயகி பாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒருவகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான் அடிமைதானே! (ஆண்-பெண் சமத்துவம் பேசும் இக்கால நிலையில் சில குடும்பங்களுக்குப் பொருந்தலாம்).

(iv) நாயக-நாயகி சம்பந்தம்:9: ‘வெள்ளைச் சுரிசங்கொடு'(7, 3) என்ற திருவாய்மொழியில்,

          கண்டதுவே கொண்டெல் லாருங் கூடிக்
              கார்க்கடல் வண்ணனோ டென்தி றத்துக்
          கொண்டுஅலர் தூற்றிற் றதுமுத லாக
              கொண்டதன் காதல் உரைக்கில் தோழி!
          மண்திணி ஞால மும்ஏழ் கடலும்
              நீள்வி சும்பும் கழியப் பெரிதால்
          தெண்திரை சூழ்ந்துஅவன் விற்றி ருந்த
              தென்திருப் பேரையில் சேர்வன் சென்றே(8)

[என் திறம்-என் விஷயம்; கழிய-ஒப்ப;திரை-அலை]

என்பது மகள் பாசுரம்.


9. இது தனி இயலில் விவரமாக விளக்கப் பெற்றுள்ளது. இயல்-காண்க.