பக்கம்:வைணமும் தமிழும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வைணவமும் தமிழும்


தென்திருப்பேரையை” அடையவேண்டும் என்ற தன் துணிவைப் பராங்குச நாயகி சொன்னதும் தோழிமாரும் தாயரும் அதனைத் தடுத்து நிறுத்தப்பார்க்கின்றதாகச் செல்லுகின்றது இத்திருவாய்மொழி.“ஊரார் பழிசொல்வதே எருவாக நின்று என்னிடம் வளர்ந்து செல்லுகின்ற காதல் எல்லா உலகங்களையும் விழுங்கிச் செல்லா நின்றது. ஆகவே, அவன் (எம்பெருமான்) இருக்கின்ற தென்திருப் பேரையில் சென்று சேர்வேன்” என்கின்றாள் பராங்குசநாயகி.

குலசேகரப் பெருமாள் திருமொழியில் 'கண்டார் இகழ்வனவே' (52) என்ற திருப்பாசுரத்தில் கணவன் நிலையில் எம்பெருமானையும் மனைவி நிலையில் தம்மையும் வைத்துக் கூறியுள்ளதைக் காணலாம்.

(v) ஞாதா-ளுேயன் உறவு: அஃதாவது இது ‘அறிவன்அறியப்படும் பொருள் உறவாகும்.

          பெயரும் கருங்கடலே
              நோக்கும் ஆறு:ஒண்பூ
          உயரும் கதிரவனே
              நோக்கும்-உயிரும்


10. தென் திருப்பேரை-நவ திருப்பதிகளில் ஒன்று. ஆழ்வார் திருநகரிக்குக் கீழக்கே சுமார் 5கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்துசாலையருகில் உள்ளது. இங்கிருந்து பொருநையாற்றைக் கடந்து (2கி.மீ. தொலைவு) சென்றால் இரட்டைத் திருப்பதியை அடையலாம். இறைவன் மகரநெடுங்குழைக்காதன்; தாயார்குழைக்காதுவல்லி நாச்சியார்; இருந்திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.