பக்கம்:வைணமும் தமிழும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

253


என்று இருபத்தொன்பதாம் பாசுரத்தில் வெளியிடுகின்றனர். இப்பாசுரத்திலும்(29) பிரபத்தியிலே நோக்கு என்பது தெளிவாகின்றது.

(v). பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் : தடைகளை நீக்க வேண்டுமானால் எம்பெருமானையே பற்ற வேண்டும். திருப்பாவையில் 16முதல் 20 பாசுரங்கள் பகவத் சொரூபமாகிய இரட்சகத்துவத்தையே காட்டுவனவாக நம்முன்னோர் குறித்துப் போயினர்.

‘நாயகனாய் நின்ற'(16) என்ற பதினாறாம் பாசுரம் ஆயச்சிறுமிகள் நந்தகோபர் திருமாளிகை வாசலில் சென்று சேர்வதைக் குறிப்பிடுகின்றது. கோபுரவாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன் - கோயில்காப்பான் என்றும், கொடிமரத்து அருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் - வாயில் காப்பான் என்றும் இவண் கூறப்பெறுகின்றனராகக் கொள்ளவேண்டும். பெரிய இடத்துக்குப் போகின்றவர்கள் துவாரபாலகர்களின், புருஷகாரம் முதலில் தேவைப்படுவதை அறிவதைப்போல் இவர்களும் அறிகின்றனர். ஆகவே, அவர்களின் தயவை, வேண்டி நிற்கின்றனர். -

திருப்பாவையில் ‘நீராட்டம்’ என்ற குறிப்பு ஐந்து பாசுரங்களில் வருகின்றது.'நீராடப்போதுமினோ' (1) 'நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்'(3) 'நாங்களும் நீராட மகிழ்ந்து'(4) 'இப்போதே எம்மை நீராட்டு'(20) ‘மார்கழி - நீராடுவான்’(26) 677று வந்துள்ளமையைக் காணலாம். ஆக, இவற்றில் ஆயச்சிறுமிகளின் குறிக்கோள் 'நீராடுதல்' என்பது