பக்கம்:வைணமும் தமிழும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

வைணவமும் தமிழும்


தெரியவந்தாலும் அவர்கள் நீராடும் இடமான பொய்கைக்கோ, யமுனைஆற்றுக்கோ சென்றனராகப் பாசுரங்களில் குறிப்பு இல்லை.

ஆனால் நந்தகோபருடைய திருமாளிகைக்குச் சென்று அங்கு நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பனை (19) உணர்த்தி, அவர்களை நோக்கித் தோத்திரம் செய்து, சிற்றஞ்சிறுகாலை எழுந்து இங்கு நாம் வந்தது எதற்காக வெனில்: ‘உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ (29) என்று விண்ணப்பம் செய்வதற்காகவே என்று தலைக்கட்டியதைக் காண்கின்றோம். இங்ஙனம் திவ்விய தம்பதிகளிடம் சென்று சேவிப்பதுதான் இவர்கள் கொண்ட 'மார்கழி நீராட்டம்’ என்பது தெளிவாகின்றது. ஆகவே, பாசுரங்களில் குறிப்பிடப்பெற்ற நீராட்டம் தண்ணிரில் தோய்வது அன்று எனவும், பகவானோடு சேர்தலையும், பாகவதர்களோடு சேர்வதையுமே நீராட்டம் என்றுச் சொல்லப்பெற்றுள்ளது. என்பதை அறுதியிடுவதாக அமைகின்றது. மூவாயிரப்படியில் பெரியவாச்சான் பிள்ளையும், ஆறாயிரப்படியில் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும் இக் கருத்தைத் தெளிவாக்கியுளளனர். .

‘அம்பரமே தண்ணிரே' (17) என்ற பதினேழாம் பாசுரத்தில் நந்தகோபர், யசோதைப்பிராட்டி, கண்ணபிரான், நம்பி மூத்தபிரான்(பலராமன்) ஆக நான்கு பேர் எழுப்பப் பெறுகின்றனர். இங்கு “உம்பியும் நீயும் உறங்கேல்” என்பது பகவத் சேஷத்துவமும்17 பாகவதசேஷத்துவமும் ஒன்றை


17. சேஷத்துவம்- அடிமைத் தன்மை