பக்கம்:வைணமும் தமிழும்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

வைணவமும் தமிழும்


(குழந்தையைத்) தாய்மார்கள் குளிரப்பார்க்குமாப்போலே, ஒளியையுடைய அழகிய கண்களாலே குளிர நோக்கினபடி' என்று விவரிப்பர். (6)

இவர்களை அடுத்து - மருத்துகளின் கூட்டமும், வசுக்களின் கூட்டமும் ஆன்மாக்கள் போகும் இடம் எங்கும் தொடர்ந்து சென்று பல்லாண்டு பாடுவர்.(7)

பிரகிருதி மண்டலத்திற்கு அப்பாலும் பரமபதத்திற்குப் புறம்பாகவும் நிற்கும் நித்தியசூரிகளும் முத்தர்களும் நல்வரவு கூறி எதிர்கொண்டு அழைப்பர் (8)

வைகுந்தம் புகுந்த அளவில் திருவாசல் காக்கும் முதலிகள் 'எமது இடம் புகுதும்' என்று உகந்து வரவேற்பர் 'மண்ணவர் வைகுந்தம் புகுதல் பெரும்பேறு' என்று சொல்லி வியப்பர் (9)

‘இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தது நமது பேறு' என்று கூறித் தம்தம் இடங்களில் வந்தவர்களின் திருவடிகளை விளக்குவர். வைணவர்கட்கு நிதியான திருவடி நிலைகளையும், திருச்சூரணத்தையும், பூரண கும்பங்களையும், மங்கல விளக்குகளையும் ஏந்திக் கொண்டு வருவர் மதிமுக மடந்தையர். ‘மதிமுகமடந்தையர்' என்ற தொடரின் உட்கருத்தை ஈட்டாசிரியர் 'தேசாந்திரம் போன பிரஜை வந்ததால் தாய்முகம் குளிர்ந்திருக்குமாப்போலே பூரண சந்திரன் போலே இருக்கிற முகங்களையுடையவர்கள் வந்து எதிர் கொள்வர்' என்று விளக்குவர் (10)

3. மடைப்பள்ளி வந்த மணம் : இந்த உலகில் மிக்க உயரத்திலமைந்த இடத்தை அடைவதற்குப் படிகளை அமைத்து அவற்றின் வழியாக ஏறிச் செல்வதை நாம்