பக்கம்:வைணமும் தமிழும்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

வைணவமும் தமிழும்


எப்படிப் பொருந்தும்? திருவாய்மொழி ஆயிரத்தில் பலபல திவ்விய தேசங்களன்றோ அநுபவிக்கப் பெற்றுள்ளன? அவற்றுள் ‘கங்குலும்பகலும்' (திருவாய் 72) என்ற திருவாய். மொழியொன்றே அரங்கநாதன் விஷயமாகக் காணப்படா நிற்க பட்டர் ஆயிரமும் அரங்கநாதன் மீதாவது ஆகும் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம்.அதற்கு மறுமொழி பகர்ந்தவர்கள் கங்குலும் பகலும் என்ற பதிகத்தின் முடிவில் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை ஆயிரத்து, இப்பத்தும் என்கையாலே திருவாய்மொழி ஆயிரமும் அரங்கநாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப்பெற்றது; அதிலிருந்து சிலதிவ்விய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் பெற்றது; ஆனதுபற்றியே ‘திருவேங்கடத் துக்கு இவை பத்தும்' (6.101) என்றும், திருமோகூர்க்கு ஈர்த்த பத்திவை (101:1) என்றும், 'இவை பத்தும் திருக்குறுங்குடிஅதன் மேல் (5.5:11) என்றும் ஆழ்வாரே அருளிச் செய்துள்ளார்” என்றார்களாம். இப்படி இருக்கும்போது இந்த ஐதிகம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டியதாகின்றது.

4. திருக்கோயில்கள் : சைவர்கள் தில்லைச் சிற்றம் பலத்தைக் 'கோயில்' என்று வழங்குதல் போல, வைணவர்கள் .திருவரங்கத்தைக் கோயில் என்று வழங்குவர். இரண்டு இடங்களும் பல அற்புத நிகழ்ச்சிகளால் ஏற்றம் பெற்றன என்பதை நாம் அறிவோம். வைணவர்கட்கு வேறு ஒரு முக்கிய சான்றும் உள்ளது. நம்மாழ்வாரின் முதல் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் 'தண்அம்துழாய்' (28) என்ற திருப்பாசுரத்தில் ‘பொருநீர்த் திருவரங்கா அருளாய்' என்ற தொடரில் திருவரங்கத்தைப் பற்றிய குறிப்பு வருவதால் 'கோயில்' என்ற