பக்கம்:வைணமும் தமிழும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

301


திருக்கோட்டி நம்பியை ஸ்தனமாகவும், திருவரங்கப்பெருமா ளரையரை வயிறாகவும், திருமாலையாண்டானை முதுகாகவும், கிடாம்பியாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடை யாகவும், பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாயும், வடக்குத் திருவீதிப் பிள்ளையை முழங்கால்களாகவும்,பிள்ளை உலக ஆசிரியரைத் திருவடியாயும், திருவாய்மொழிப் பிள்ளையைப் பாதஇரேகை யாகவும் மணவாள மாமுனிகளைப் பாதுகையாயும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்டரமாகவும், (திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும் முத்லியாண்டான்னத் திரி தண்டமாயும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும் வடுக நம்பியைக் கல்லாடையாகவும், திருக்குருகைப்பிரான் பிள்ளானைத் தோமாலிகையாகவும், பிள்ளையுறங்காவில்லி தாசரை நிழலாகவும்.இங்ஙனம் இராமாதுசரைக் சர்வாசாரிய சொருபராகக் கொள்வது மரபு.

3. திருவாய்மொழியின் பாசுரப் பிரிவினை: பராசரபட்டர் என்ற சமயப் பேரறிஞர் தாம் அருளியுள்ள திருவாய்மொழித் தனியனில்,

          வான்திகழும் சோலை
              மதிலரங்கர் வண்புகழ்மேல்
          ஆன்ற தமிழ்மறைகள்
              ஆயிரமும்.

என்று சொல்லியிருப்பதனால் திருவாய்மொழி ஆயிரமும் திருவரங்கநாதன் மீதாகும் என்று ஏற்படுகின்றது. இந்த ஐதிகம்3


3. ஐதிகம் என்பது, சம்பிரதாயம் அடியாக வந்த ஒரு வார்த்தை; அதாவது முன் நடந்ததைத் தெரிவிப்பது.