பக்கம்:வைணமும் தமிழும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

வைணவமும் தமிழும்


பெறுகின்றார் என்பதை நாம் அறிவோம். ஏனைய ஆழ்வார்களைச் சடகோபரின் ஒவ்வோர் அவயமாகவும் நம்மாழ்வாரை அவயவியாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம் பெருமாள். பூதத்தாழ்வாரைத் தலையாகவும், பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் - திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும், குலசேகராழ்வாரையும், திருப்பாணாழ்வாரையும் திருக்கைகளாகவும், தொண்டரடிப் பொடியாழ்வாரைத் திருமார்பாகவும், திருமங்கையாழ்வாரைத் திருநாபியாகவும் மதுரகவிகளையும், எம்பெருமானாரையும் திருவடிகளாகவும் பெரியோர் அருளிச்செய்வார். (எம்பெருமானுடன் கலந்து தெய்வமாக உயர்ந்த ஆண்டாள் விடப்பெற்றிருப்பது கவனிக்கதக்கது.)

நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்பொழுதும் விளங்குகின்றார் என்பது வைணவக் கொள்கை. அதனால் திருமால் திருக்கோயில்களில் அப்பெருமானைச் சேவிக்கச் செல்வோரின் முடிமீது அவர் திருவடியாக வைக்கப் பெறுவதைச் 'சடகோபன்' 'சடாரி’ என்று வழங்குகின்றனர். 'சடகோபன்' 'சடாரி' என்பன நம்மாழ்வாரின் திருப்பெயர்.

களாகும்.

(இ). இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமண்டலமாகவும், உய்யக் கொண்டாரைக் (புண்டரீகாட்சரைக்) கண்ணாகவும் மணக்கால் நம்பியைக் (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும், ஆளவந்தாரை (யாமுனாச்சாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாயும், திருக்கச்சிநம்பியைத் திருக்கையாகவும்,