பக்கம்:வைணமும் தமிழும்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

வைணவமும் தமிழும்


(அ). எம்பெருமான்களின் திருக்கழல்கள்: திருவரங்கம் பெரிய பெருமாளின் திருவடியைத் திருப்பொலிந்த சேவடி என்று குறிப்பது வழக்கம், சான்று :

          திருப்பொலிந்த சேவடிஎன்
              சென்னியின்மேல் பொறித்தாய் (5.4:7)

என்பது பெரியாழ்வார் திருமொழியின் பாசுரப்பகுதியாகும்.

கச்சிநகர் தேவப்பெருமாளின் திருவடியைத் ‘துயரறு சுடர்அடி' என்று குறிப்பிடுவது மரபு.

          துயர்அறு சுடர் அடி
              தொழுதுஎழு என்மனனே! (1.1:1)

என்ற திருவாய்மொழிப் பாசுரஅடியே இதற்குச் சான்று. திருவேங்கடமுடையானின் திருவடி ‘பூவார்கழல்’ என்று குறிப்பிடுவது வழக்கம். சான்று :

          பூவார் கழல்கள் அருவினையேன்
              பொருந்துமாறு புணராயே (6.10;4)

என்ற திருவாய் மொழிப் பாசுரஅடியில் வரும் ‘பூவார்கழல்’ என்ற தொடர்

(ஆ).கோவில் அமைப்பில்: திருக்கோயில் அமைப்பில் சில தத்துவங்கள் விளக்கம் பெறுவனவாக உள்ளன.

(i). திருவரங்க விமானம்: திருக்கோயிலின் ஏழு திருச்சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது; பிரணவ ஆகாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளா யுள்ளன. பரவாசுதேவர் இதிலிருந்து சேவை சாதிக்கின்றார். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் 'நமோ நாராயணாய'