பக்கம்:வைணமும் தமிழும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - சில

305


என்பதிலுள்ள ஏழு எழுத்துகள் ஏழு திருமதில்களாகவும் அமைந்துள்ளன[1] எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல, திரு அரங்கத்துக்குச் செல்வோர்கட்கும் இறைவன் நேரே புலப்படுவான் என்பது கருத்து.

விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம். விஷ்ணுகாயத்திரி மந்திரத்தின் அறிகுறியாக 24 தூண்கள் அமைக்கப்பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்).

(ii). காஞ்சி வரதராசரை (அத்திகிரி)[2], அருளாளனைச் சேவிக்க 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள். அதாவது, தந்மாத்திரைகள் 5: ஞானேந்திரியங்கள் 5; கர்மேந்திரியங்கள் 5 ; பூதங்கள் 5 ஆக, 20.இவற்றுடன் பிரகிருதி, மகான் 1, அகங்காரம்1. மனம்1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன்[3](சீவன்மா) மகாபுருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

(iii), திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம் : ‘அட்டாங்கவிமானம் என்பது.96 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை, தஞ்சை கோபுரத்தின் நிழல் போல; ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை உடையது. மேல்தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன.


  1. திருவரங்க மாலை-95
  2. ஹஸ்திகிரி-அத்திகிரி. ஹஸ்தி-யானை,கிரி-மலை. ஹஸ்திகிரி தமிழில் அத்திகிரி என்றாயிற்று
  3. புருடன்-புருஷன். இது சாரீத்தில் வசிப்பவன் என்று பொருள்படும்