பக்கம்:வைணமும் தமிழும்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

வைணவமும் தமிழும்


இவன் குறிப்பிட்டவாறு பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியின் சக்தி தாரதம்மியத்தால் அந்தந்த தலங்கள் (1) திவ்வியம் (2) ஆர்ஷம் (3) பெளராணம்(4) மாதுசம், (5) ஸ்வயம், வியக்தம் என்று ஐந்து வகையாகப்பாகுபடுத்தப்பெற்றுள்ளன. இந்தத் திருத்தலங்க்ளின் சொருபசக்தி விசேடங்கள் ஆகமங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இந்த ஆகமங்கள் பாஞ்சராத்திரம், வைகாநச கல்பசூத்திரம் என்பவையாகும். இவற்றுள் பாஞ்சராத்திர சம்ஹிதை ஆதி கேசவப்பெருமாள் திருவுள்ளப்படி திரேதாயுகத்தில் உண்டானது. அனந்தன், கருடன், விஷவக்சேனர், நான்முகன், சிவன் இவர்களனைவர்க்கும் ஏற்பட்ட ஐயங்களைப் பகவான் ஐந்துஇரவுகளில் போக்கியருளின செய்திகளைக் கொண்டது. வைகானச கல்பகுத்திரம் சீமன் நாராயணனே விகனசர் என்னும் மாமுனிவருக்கு அருளிச் செய்தது.

இந்த இரண்டு ஆகம சாத்திரங்களும் ஞானம், யோகம், கிரியை, சரிதம் இவற்றை நுவலும். இவற்றுள் கிரியையும் சரிதமும் நம் சந்ததிகளுடன் சம்பந்தப்பட்டவை. கிரியை என்பது திருக்கோயில்கள் கட்டப் பெறுவது பற்றியும், திருமேனிகள் செய்வதுபற்றியும் இத்திருமேனிகளைப் பிரதிட்டை செய்வதுபற்றியும் சொல்லும், சரியை என்பது திருக்கோயிலில் நடைபெறும் தினசரிச் சடங்குகள், உற்சவங்கள் நடைபெறும் முறை இவைபற்றிச் சொல்லும், இந்த இரண்டு சாத்திரங்களும் வைணவ சந்நிதிகளைப்பற்றியே ஏற்பட்டிருந்தாலும், சில சந்நிதிகள் பாஞ்சராத்திர ஆகம நெறி களையும் மற்றவை. வைகானச ஆகம நெறிகளையும் மேற்கொண்டு நடைபெற்று வருகின்றன.