பக்கம்:வைணமும் தமிழும்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

வைணவமும் தமிழும்


(ஒ) பரமைகாந்திகள் : முன்சொன்னவர்களைப் போலவே யாவற்றையும் விட்டுக் கண்ணனையே உபாயமாகக் கொண்டு அவனே சுவாமி என்றும், தம்மை அவனுடைய சொத்தென்றும் நினைத்து அதனாலே சொத்துக்குடை யவனான சுவாமி அவன் விருப்பப்படி செய்து கொள்ளக்கடவ னென்று தமக்கொரு சம்பந்தமும் இல்லாமல் இருப்பவர்கள்.

9. பூநீவைணவ இலட்சுணங்கள் : பட்டர் தம் திருவடிச் சம்பந்தம் பெற்ற ஒரு சிரீவைணவனுக்கு அனந்தாழ்வான்மூலம் அருளிச் செய்தவை இவை:

(i) ஸ்ரீவைணவன் கொக்கைப்போல் இருப்பான். கொக்கு நீர் நிறைந்ததிருக்கும் இடங்களில் வாழும். வெண்மையாய் இருக்கும். சிறிய மீன்களைப்பொருட்படுத்தாது, பெரிய மீன் அகப்பட்டால் விடாது கெளவிக் கொள்ளும், மழைக் காலத்தில் மின்னலுக்கும் இடிக்கும் பயந்து மலை இடுக்குகளில் புகுந்து கொள்ளும். தன் விருப்பமான பொருளைப் பெறுவதிலேயே சிந்தையாயிருக்கும். சிரீவைணவனும் புண்ணிய தீர்த்த முள்ள இடங்களில்தான் வசிப்பான். அவன் மனம் வெண்மையாய், அதாவது கபடமற்றதாய், மிகத் தூய்மையாயிருக்கும். தாழ்ந்த தேவதைகளை அசட்டை செய்வான். அர்த்த பஞ்சகம் தத்துவஞானம் இவற்றை முற்றிலும் நன்கு அறிந்தவர்களைச் சந்திக்க நேருங்கால், அவர்களை நன்கு உபசரித்து அவர்கள் அருளிச்செய்யும் இரகசியங்களை அப்படியே கெளவிக்: கொள்வான். பிரதிகூலர்களால் தனக்கு ஆன்மநாசம் நேருவ தானால் திவ்விய தேசங்களில் சென்று வாழ்வான். பகவத்பாகவத ஆசாரிய தியானத்தில் ஒருமனப்பட்டிருப்பான்.