பக்கம்:வைணமும் தமிழும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வைணவமும் தமிழும்



என்ற பகுதியால் தன்னைத் திருமாலடியான் என்று குறிப்பிடுவ தாலும் திவ்விய தேசங்கட்கு யாத்திரையாகப் புறப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதாலும் திருமால் வழிபாடு பெரு வழக்காக இருந்ததை அறியக் கிடக்கின்றது.

மாங்காட்டு மறையோனைஒரு பழைய பாகவதனாக நினைந்து திரு இராமராசன்

தென்னரங் கேசனை வேங்கடம்
மேய செழுமுகிலைத்
தன்னிரு கண்களும் காட்டென்ன
உள்ளம் தனைக்கவற்ற
மன்னிய யாத்திரை மேற்கொள்ளும்
மாங்கால் மறையவன் சீர
சென்னியில் தாங்கினன் ; வாழிய
அன்னவன் திருவடியே.[1]

என்று தம் நூலில் போற்றுவர்.

மதுரையில் குரவைக் கூத்துள் ஆய்ச்சியரின் ஒருபாடலில் கண்ணனின் அவதாரம் பற்றிய செய்தி வருகின்றது.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையும் தீங்குழல் கேளாமே தோழி (1)
பாம்பு கயிறாக் கடல்கடந்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (2)
  1. திருவேங்கடமுடையான் அலங்காரம்-பாயிரம்-3