பக்கம்:வைணமும் தமிழும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வைணவமும் தமிழும்



சொல் ஞானத்தினால் ஏற்படும் சுதந்திரத் தன்மையை ஒழிக்கின்றது. இதன் காரணமாக ஏற்படும் “தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும்” என்ற எண்ணத்தையும் நீங்குகின்றது. இனி இவளைக் காத்து இரட்சிப்பவன் ஈசுவரனே ஆகின்றான் என்ற துணிவு பிறக்கின்றது. அஃதாவது ஈசுவரனே உபாயம் என்ற பொருள் கிடைக்கின்றது. இந்த மனநிலையைத் தான் ‘தாய்' என்று குறிக்கப் பெறுகின்றது. திருவாய்மொழியில் தாய் பாவனையில் பேசும் ஏழு பதிகங்களும்[1] ஈசுவரபாரதந் தரியத்தையும், அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன. ஆகவே இவை உபாயத்தில் உறுதி பூண்டிருக்கும் நிலையிலே எழுந்த பேச்சுகள் என்பது தெளிவாகின்றது.

தாய்ப்பாசுரமாக நடைபெறுவதில் ஒன்றைக் காட்டுவேன் ‘மண்ணை இருந்து துழாவி (44) என்னும் திருவாய்மொழியில் ஐந்தாம் பாசுரம் :

கோமள ஆன்கன்றைப் புல்கி,
'கோவிந்தன் மேய்த்தன' என்னும்;
போம்இள நாகத்தின் பின்போய்
‘அவ்ன்கிடக் கையீ' தென்னும்;
ஆமளவு ஒன்றும் அறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே (5)

[கோமளம் - இளமை அழகு; கிடக்கை - படுக்கை; ஆம் அளவு - ஆகும் அளவு; மால்-மயக்கம்]


  1. திருவாய் 2.4.4.2;4.4;5.6;6.6;6.7;7;2