பக்கம்:வைணமும் தமிழும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வைணவமும் தமிழும்


எடுத்துக்காட்டாக 'அஞ்சிறைய மடநாராய்' (1.4) என்றதில்[1] தூது அமைந்திருக்கும் முறையை ஈண்டு விளக்குவேன். இத்திருவாய் மொழியில் பத்தாம் பாசுரத்தில் :

கடல்ஆழி நீர் தோற்றி
அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக்
கண்டக்கால்..... (10)

என்பதால் வியூகத்தில் தூது என்பது தெளிவாகின்றது. இதில் நான்காம் அடியில் 'மட நெஞ்சே!' என்று வருவதால் இப்பாகரம் நெஞ்சைத் துது விடுவதாக அமைகின்றது.

என்பிழையே நினைந்தருளி
அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின்
தகவினுக்கு என்று ஒருவாய்ச் சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே!
யான்வளர்த்த நீ அலையோ? (7)

இந்தப் பாசுரத்தில் கிளி தூதாக அமைகின்றது. ‘என் பிழையே நினைந்தருளி' என்ற தொடரால் அறியப்படுவது; “எம் பெருமான் தனது சீல குணத்தால் முதலில் ஆழ்வாருடன் கலந்துவிட்டான்; கலந்த பிறகு அவரிடத்திலிருக்கும் குற்றங்களைக் கண்டான்; அதனால் அவரை வெறுத்துப் பிரிய


  1. இந்தப் பதிகத்தில் நாரை (!),குயில்கள் (2), அன்னங்கள்(3), அன்றில்கள் (4), சிறு குறுகு (5), வண்டு (6), இளங்கிளி (7), சிறு பூவை (8), வாடை (9), நெஞ்சு (10) என்பவற்றைத் து து விடுகின்றாள் ஆழ்வார் நாயகி.