பின்னிணைப்பு
கலைச்சொற்கள் விளக்கம்
அகிலம் (Universe) : வான வெளியில் கோள்கள், விண் மீன்கள் முதலிய அனேத்தும் அடங்கிய பகுதி.
அதிர்வு (Vibration) : நாணற்குச்சி எடுத்துக்காட்டில் (பக்கம்-26) அது அதிருங்கால், அ.என்னும் இடத்திலிருந்து ஆடத் தொடங்கி ஆ என்னும் இடத்தை அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் அ என்னும் இடத்தை அடையும் ஆட்டமே 'அதிர்வு' எனப்படும். அஃதாவது, ஓர் அலேயின் இயக்கமே இது.
அயனப் பாதை (Orbit): வான நூலில் சூரியனேச் சுற்றிக் கோள்கள் செல்லும் வழி அணுவியலில், உட்கருவினைச் சுற்றி மின்னணுக்கள் செல்லும் பாதை.
அதிர்வு - எண் (Frequency) : ஒரு வினுடியில் அலே த்தனே தடவைகள் அதிர்கின்றதோ அத்தனே தடவைகளே அதிர்வு - எண் என்பது.
அலை (Wave) இயக்க கிலேயிலுள்ள ஆற்றலின் ஒற்றை அதிர்ச்சியே இது.
அலை நீளம் (Wave length) ; இரண்டு அலகட்கும் இடையேயுள்ள தூரம்; ஓர் அலையின் முகட்டிலிருந்து மற்ருேள் அலேயின் முகட்டிற்கு உள்ள துாரமே இது. அலேயின் வேகத்திை அதிர்வு-எண்ணுல் வகுத்தால் அலே நீளம் கிடைக்கும்.
இருதிசை மின்னோட்டம்(Alternating Current): மின்னணுக்கள் ஒரே திசையில் நகராமல் வினாடியொன்றுக்கு இலட்சக்கணக்கான தடவைகள் திசை மாறிச் சென்று கொண்டிருப்பது