உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. லெய்டன் சாடி

ல ஆண்டுகட்கு முன்னர் யாரோ ஒருவர் ஒரு கண்ணாடிச் சாடியின் உட்புறமும் வெளிப்புறமும் மெல்லிய வெள்ளியத் தகட்டினால் போர்த்தார். சாடியின் தலைப்புறத்தில் ஒர் உலோகக் குமிழ் இருந்தது: இந்தக் குமிழின் உட்புறத்தில் ஓர் உலோகக் கம்பும் (rod) அதன் நுனியில் நெகிழ்வான சங்கிலியும் இருந்தன. சங்கிலி சாடியின் உட்புறத்தில் நன்கு படிந்திருந்தது.


படம் 28. லெய்டன் சாடி.


ஹாலந்து நாட்டில் லெய்டன் (Leyden) என்ற இடத்தில் இது முதன் முதலாகச் செய்யப் பெற்றதால் இது லெய்டன் சாடி (Leyden jar) என்று வழங்கப்பெறுகின்றது. இந்தச் சாடிக்கு ஒர் அதிசயமான தன்மை உண்டு. ஒரு நீர்த்தொட்டி நீரைச் சேகரம் செய்து வைப்பதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/65&oldid=1396250" இலிருந்து மீள்விக்கப்பட்டது