புலவர் என்.வி. கலைமணி
தாயின் முகத்தில் காலத்தின் கீறல்தான் இருக்கும் - இளம் வெட்டு அதில் இருக்காது.
ஆனால் முழுமை பெற்ற இதயம் மட்டும் அங்கே எப்போதும் உண்டு.
அதோ, உன்னை வளர்த்தவன் ஆகாயத்தைப் பார்த்து - உனக்காக வேண்டிக் கொண்டிருக்கின்றான்.
செத்த பிறகும் - உனக்காக அவன் பல தடவை அழுதிருக்கிறான் - நான் அதைக் கேட்டிருக்கிறேன்.
ஏன் தெரியுமா? மரணக் கூற்றத்துடன் அந்தத் தமிழ் நாட்டு மாமன்னர் பலநாள் போராடிக் கொண்டிருந்தார் அல்லவா?
அப்போது, "சொர்க்கத்தில் அண்ணா” என்று நீர் யெழுதியெழுதி விக்கி விக்கித் தேம்பித் தேம்பி வசன நடைப் பாடலில் பாடிக் கொண்டிருந்தீரே !
மரணப் போராட்டத்தில் இருந்த அந்த மன்னர் - உனது புலம்பலோசையைச் செவியாரக் கேட்டுக் கேட்டுக் கண்ணீர் உகுத்தவர் - அதனால்தான்!
“எப்போது போகும், ஏன் இன்னும் போகவில்லை”என்று கூறிக் கொண்டே - பதவிக்காகக் கிளிசரின் கண்ணிர் உட்குத்துக் கொண்டிருந்தவர்கள் இடையே, நீர் தானே உமது இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு சில நாட்கள் தினந்தோறும் "கடிதத்தில் ” எழுதி எழுதிக் கண்ணிர் விட்டீர்!
தேசிய மரத்தடியிலிருந்த படியே, தன்னந்தனிப் பறவையாக - பாசத்தோடு பரிந்து அழுத - முதல் பறவையே - நீர் தானே!
"அறிவு" உம்மைக் குறை கூறும் போதெல்லாம்-நீர் அதனை மீறிச் சென்றிருக்கிறீர்!
அதனால்தான், மனித நேயப் பண்புக்கு - நாட்டு நேய அன்புக்கு முதலிடம் தந்து, “மரத்தறிவைப்" புறக்கணித்து - அண்ணாவுக்காக அழுதபடியே இருந்தீர்!
இதனை எல்லாம் மறந்த நீர் - இப்போது கூறுகிறீர் - "கழுவப்படாத பாத்திரத்தில் - வேகப்படாத சோற்றை உண்டதாக!"
93